Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2021 18:37:46 Hours

ஓய்வூதியதாரர்களுக்கு ஜூன் 10-11 திகதிகளில் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ள போக்குவரத்து வசதி வழங்கப்படும்

முந்தைய தனிமைப்படுத்தல் காலங்களின் போலவே நாடளாவிய ரீதியிலாக பாதுகாப்புப் படைத் தலைமையகம், படைப்பிரிவுகள், பிரிகேட்கள், கடற்படை மற்றும் விமானப்படை அமைப்புகளுக்கு 2021 ஜூன் மாதம் 10-11 திகதிகளில் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்வற்காக வங்கிக்கு சென்று வருவதற்கான போக்குவரத்துக்கான பஸ் வசதிகளை பெற்றுக் கொடுக்குமாறு பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த பகுதிகளின் மாவட்ட / பிரதேச செயலகங்களின் சம்பந்தப்பட்ட கிராம சேவையாளர்களின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் இராணுவத்தினால் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி வழங்கிய உத்தரவைத் தொடர்ந்து இந்த திட்டத்தை முப்படைகளினால் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

எனவே அனைத்து ஓய்வூதியதாரர்களும் அந்தந்த கிராம சேவையாளர்களை தொடர்பு கொண்டு இந்த வசதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.