29th March 2019 14:49:42 Hours
1 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணியில் சேவை புரிந்த (ஓய்வூ) கோப்ரல் கே.குமாரசுவாமி அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து காலம்சென்றார். அன்னரின் இறுதி கிரகைகள் இராணுவ சம்பிரதாய முறைப்படி யாழ் பாதுகாப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவு மற்றும் 515 ஆவது படைப் பிரிவின் படையினரால் (25)அம் திகதி திங்கட்கிழமை இடம் பெற்றது.
அதன்படி இவரின் இறுதி சடங்கானது கோபாவில் உள்ள கீரிமலை பொது மயானத்தில் இராணுவ கௌரவ மரியாதையுடன் பொதுமக்களின் பங்களிப்புடன் இடம் பெற்றது.
இவர் இராணுவ வாழ்கையில் 22 வருட கால சேவையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற லான்ஸ் கோப்ரலாக ஓய்வு பெற்ற பின்னர் யாழ் குடாநாட்டில் வாழ்ந்து வந்தார்.
1957 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் சேர்ந்த இவர் 1ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணியில் இணைந்து, இலங்கை இராணுவ சேவை பதக்கம், இலங்கை இராணுவம் 25 வது ஆண்டு பதக்கம், இலங்கை ஆயுத சேவைகள் நீண்டகால பதக்கம் மற்றும் ஜனாதிபதியின் ஆரம்ப பதக்கங்களை பெற்று தாயகத்திற்கு தனது மதிப்புமிக்க சேவையை வழங்கியுள்ளார்.
இறுதி நிகழ்வில் 515ஆவது படைப்பிரிவின் படையினர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களும் கலந்து கொண்டன. latest jordans | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD