Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th May 2019 21:56:28 Hours

ஓய்வு பெற்ற பிரிகேடியர் ரூபசிங்க அவர்களது இராணுவ மரணச்சடங்கு

இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிரிகேடியர் எச்.ஈ ரூபசிங்க அவர்களது மரணச் சடங்குகள் இராணுவ கௌரவ மரியாதையுடன் இம் மாதம் (15) ஆம் திகதி பொறளை பொது மையானத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த அதிகாரி இம் மாதம் (11) ஆம் திகதி காலமாணார். இவர் இராணுவ சேவையிலிருந்த சமயத்தில் தியதலாவை இராணுவ பயிற்சி நிலையத்திலும், இராணுவ தலைமையக நிர்வாக பிரிவில் 3 ஆம் தர பதவிநிலையிலும், பனாகொட ஒத்துழைப்பு குழு தலைமையகத்தின் 2 பதவி நிலை உத்தியோகத்தராகவும், ஆட்சேர்ப்பு பணியகத்தின் ஒருங்கினைப்பு அதிகாரியாகவும், ஆளனி நிருவாக பணியகத்தின் 1 பதவி நிலை உத்தியோகத்தராகவும், 4 ஆவது பீரங்கிப்படையணியின் கட்டளை அதிகாரியாகவும், யாழ் மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகங்களிலும் ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் கடமை வகித்துள்ளார்.

பிரிகேடியர் ரூபசிங்க அவர்கள் இலங்கை இராணுவத்தில் 1958 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இணைந்து 37 வருட இராணுவ சேவையை பூர்த்தி செய்து 1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றார்.

இவருக்கு இராணுவ தளபதியினால் இவரது மரணச் சடங்கின் போது மையானத்தில் வைத்து விஷேட பகுதி 1 வெளியிடப்பட்டன. bridgemedia | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK