Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2019 15:01:27 Hours

ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் இராணுவ தளபதியை சந்திப்பு

மேஜர் ஜெனரல் கே.எம்.ஆர்.பி கருணாதிலக அவர்கள் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று செல்லும் முன்னர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை (24 ) ஆம் திகதி மாலை இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பின்போது இராணுவ தளபதி அவர்கள் இராணுவத்துக்கு அவரால் வழங்கப்பட்ட பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார், அதற்கமைய ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் அவர்கள் தனது எண்ணங்களையும் தளபதியிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்த சந்திப்பின் இறுதியில் பாராட்டு மற்றும் நினைவின் அடையாளமாக சிறப்பு நினைவு சின்னம் இராணுவ தளபதி அவர்களால் வழங்கப்பட்டது.

ஓய்வு பெற்று செல்லும் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியைசேர்த மேஜர் ஜெனரல் கே.எம்.ஆர்.பி கருணாதிலக அவர்கள் 642 ஆவது படையணியின் படைத் தளபதியாக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஆட்சேர்பு பணிப்பாளர், தகவல் தொழில்நுட்பம் பணிப்பாளர், பிரிகேடியர் பொது பணிப்பாளர், வட மத்திய முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளை தளபதி ஆகிய நியமனங்களில் பணியாற்றினார். trace affiliate link | UOMO, SCARPE