Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th July 2021 19:53:45 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் பதவி நிலை பிரதானிக்கு இராணுவ தளபதி பாராட்டு

இராணுவத்தின் சிரேஸ்ட வீரர்களில் ஒருவரும் இராணுவ பதவி நிலை பிரதானியும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார 35 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக சேவையாற்றி தற்பொழுது ஓய்வு பெற்றுச் செல்வதையிட்டு செவ்வாய்க்கிழமை (13) இராணுவ தலைமையகத்தில் வைத்து பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.

இதன் போது ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் குறித்த சந்திப்பின் போது போர்க்கள சந்திப்புகள், அபாயகரமான அனுபவங்கள், மனிதாபிமான நடவடிக்கைகளின் போது எதிரிக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பில் நினைவு கூர்ந்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு சிறந்த அதிகாரியாக இராணுவத்தின் வளர்ச்சிக்கு அவர் அளித்த அர்ப்பணிப்பை தளபதி பாராட்டினார். புனித மடு தேவாலயத்தை மீட்பதற்காக எல்.ரீ.ரீ.ஈ அமைப்புடன் இடம்பெற்ற கடுமையான மோதல்கள் தொடர்பிலும் நினைவு கூர்ந்தனர்.

மேலும் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெற்றுச் செல்லும் அதிகாரிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் அவரது நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் முழுமையான அர்ப்பணிப்பு தொடர்பாக பேசினார், குறிப்பாக பயங்கரவாத காலத்தில் சொந்த நாட்டின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான அவசியம் எழுந்திருந்த போது வழங்கிய அர்ப்பணிப்புக்களை பாராட்டும் வகையிலும் நட்புறவின் அடையாளமாகவும், ஜெனரல் ஷவேந்திர சில்வா நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

சந்திப்பின் நிறைவில், ஓய்வுபெற்ற சிரேஸ்ட அதிகாரி தனது இராணுவ சேவைக்காலத்தில் வழங்கிய ஆதரவுகளுக்கும், நட்புறவுக்கும் இராணுவத் தளபதிக்கு நன்றி கூறினார். மேலும் தளபதியின் அலுவலகத்திலும் பதவி நிலை பிரதானியாக சேவையாற்றிய ஓய்வு பெரும் சிரேஸ்ட அதிகாரி தொடர்பிலான விவரம் கீழ்வருமாறு.

மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார 17 ஜனவரி 1986 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவ நிரந்தர படையில் இணைந்துகொண்டிருந்ததுடன் கெமுனு ஹேவா படையணியிலும் இணைக்கப்பட்டார். மே 2009 க்கு முன்னர் இடம்பெற்ற சமாதானத்திற்கான போர் நடவடிக்கைகளை உள்ளடக்கிய இராணுவத்தில் பல முக்கிய நியமனங்களை அவர் வகித்துள்ளார்.

5 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவ காலாட்படை பயிற்சி மையத்தின் கட்டளை அதிகாரி , 572 வது பிரிகேட் தளபதி உள்ளிட்ட நியமனங்களை வகித்துள்ள அவர் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மடு தேவாலயத்தை மீட்கும் நடவடிக்கைகளில் முன்நின்று செயற்பட்ட அதிகாரியாவார்.

அவர் 111 வது பிரிகேட் தளபதி , இராணுவ தலைமையகத்தின் தன்னார்வ பணிப்பகத்தின் பணிப்பாளர், 61 வது படைப்பிரிவு தளபதி, 54 வது படைப்பிரிவு தளபதி, 11 வது படைப்பிரிவு தளபதி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி உள்ளிட்ட பதவிகளை அவர் இராணுவ தலைமைக பதவி நிலை பிரதானியாக நியமனம் பெரும் முன்னதாக வகித்தார்.

அத்தோடு இலங்கை இராணுவ ஹொக்கி குழுவின் தலைவரும், ஆர்வம் மிக்க விளையாட்டு வீரருமான மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார ஓர் ஆளுமை மிக்க மற்றும் அச்சமின்றி போரிடக்கூடிய அதிகாரியும் ஆவார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் உக்கிரமடைந்து காணப்பட்ட போது மூன்று முறை காயமடைந்துள்ளார். மிகவும் துணிச்சலான காலாட்படை அதிகாரியான, அவர் தேசப்பற்று, துணிச்சலுக்காக ரன விக்கிரம பதக்கத்தை மூன்று தடவைகளும் ரன சூர பதக்கத்தை இரண்டு தடவைகளும் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட காயங்களுக்காக தேச புத்ரா விருதையும் மூன்று முறை பெற்றுக்கொண்டர் ஆவார்.

வெளிநாட்டுகளில் மேற்கொண்ட இராணுவம் தொடர்பிலான கற்கை நெறிகளின் போது, இளம் அதிகாரிகளுக்கான கற்கை நெறி (1988), படையணி சமிஞ்ஞை அதிகாரி கற்கை நெறி (1994), இளம் கட்டளை அதிகாரி கற்கை நெறி (1996), பரசூட் கற்கைநெறி (2004), சிரேஸ்ட கட்டளை அதிகாரிகளுக்கான கற்கைநெறியை (2008) இந்தியாவிலும், ரெட் மிசெல் கற்கைநெறியை (2006) பீஜிங், சீனாவிலும் தொடர்ந்ததோடு பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பட்டம் பெற்றவரும் கற்கை நெறியில் சிறந்து விளங்கியவரும் ஆவார். அத்தோடு, 2015 – 2017 வரையில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளராகவும் மேஜர் ஜெனரல் செனரத் பண்டார சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.