Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2020 15:12:17 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் உயரதிகாரிக்கு கௌரவ மரியாதைகள்

இலங்கை இராணுவத்தில் 34 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் மங்கள விஜயசுந்தர அவர்களுக்கு பனாகொடையில் அமைந்துள்ள இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர் தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி கௌரவ அஞ்சலிகளை செலுத்தினார். பின்னர் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பலில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பின்னர் தலைமையக சாஜன் விடுதியில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்விலும் இணைந்து கொண்டு பின்னர் அங்குள்ள படையினர்களுடன் உரையாடலையும் மேற்கொண்டார். இவர் இறுதியில் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

மேஜர் ஜெனரல் மங்கள விஜயசுந்தர அவர்கள் இலங்கை இராணுவத்தில் 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி இணைந்து தியதலாவை இராணுவ எகடமியில் பயிற்சிகளை மேற்கொண்டு இரண்டாம் தர லெப்டினனாக இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு 1987 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் திகதி உட்புகுத்தப்பட்டார். இவர் விலைமதிப்பு மிக்க சேவையை இராணுவத்தில் 34 வருடங்கள் மேற்கொண்டு ஓய்வு பெற்றுச் சென்றார்.

இந்த மூத்த அதிகாரிக்கு தலைமையக அதிகாரி விடுதியில் இரவு விருந்தோம்பல் மற்றும் பிரியாவிடை நிகழ்வுகள் அன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அச்சந்தர்ப்பத்தில் இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்களினால் இந்த மூத்த உயரதிகாரி ஆற்றிய பாரிய சேவைகளை கௌரவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து இவர் சார்பாக உரை ஆற்றப்பட்டு பின்பு இவருக்கு நினைவு பரிசொன்றும் பரிசாக வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார். Running Sneakers Store | Jordan Shoes Sale UK