Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2020 10:01:04 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் இராணு உயரதிகாரிக்கு இராணுவ தளபதி வாழ்த்துக்கள்

இராணுவ செயலாளர் நாயகமாக முன்பிருந்த மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்கள் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளமையால் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இன்று (3) ஆம் திகதி இராணுவ தலைமையக பணிமனையில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இராணுவ தளபதியவர்கள் மூத்த உயரதிகாரியான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்களுக்கு இராணுவத்தில் மூன்று தசாப்த காலமாக ஆற்றிய பாரிய சேவைகளை கௌரவித்து பாராட்டுக்களையும் தெரிவித்து இவருக்கு நினைவு பரிசொன்றையும் வழங்கி வைத்து கௌரவித்தார்.

மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்கள் இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த அதிகாரியும் இராணுவத்தில் தலைமை பதவிகளையும் இவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Buy Sneakers | Trending