Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st April 2021 22:48:40 Hours

ஓய்வுபெற்றும் மேஜர் ஜெனரல் அஜித் பல்லவலவுக்கு இராணுவ மரியாதை

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பதவி நிலைப் பிரதானியாக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் அஜித் பல்லாவல 35 வருட அர்ப்பணிப்பான இராணுவ சேவையை பூர்த்தி செய்துக்கொண்டு சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்வதையிட்டு அவரை கௌரவிப்பதற்கான பிரியாவிடை நிகழ்வு அம்பேபுஸ்ஸவிலுள்ள இலங்கை சிங்கப் படையின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது.

படையணி தலைமையகத்தின் பிரதி நிலையத் தளபதி கேணல் துலித் பெரேரா அவர்களால் மேஜர் ஜெனரல் அஜித் பல்லாவல அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன், பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் செலுத்தப்பட்டது. அதனையடுத்து படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதி பிரிகேடியர் தம்மிக்க திசாநாயக்க அவர்களினால் பிரதம விருந்தினருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

அத்தோடு இலங்கை சிங்கப் படையினரால் பாதுகாவலர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு மேஜர் ஜெனரல் அஜித் பல்லாவலவின் சேவை கௌரவிக்கப்பட்டதுடன் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவான கௌரவிப்புக்களும் வழங்கப்பட்டன.

பின்னர் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் பங்கேற்ற அவர் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் நிகழ்வின் இறுதி அம்சமாக படையணி தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் படையினருக்கான உரையொன்றினையும் நிகழ்த்தினார்.

இந் நிகழ்வின் பின்னர் மேஜர் ஜெனரல் அஜித் பல்லாவல மற்றும் திருமதி பத்மினி பல்லாவல ஆகிய இருவரும் இராணுவத்துக்கும், படைப்பிரிவுக்கும் ஆற்றிய சேவைகளுக்காக கௌரம் வழங்கப்பட்டது. இதன்போது இலங்கை சிங்கப் படையின் அதிகாரிகள் சார்பில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களால் பிரியாவிடைக்கான உரை நிகழ்த்தப்பட்டது.

உரையின் பின்னர், ஓய்வு பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் அஜித் பல்லாவலவுக்கு இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதைக் குறிக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அதனையடுத்து இலங்கை சிங்கப்படையின் தலைமையகத்தில் வீதி அணிவகுப்பின் மூலம் அவருக்கு மரியாதை வழங்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.