Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th April 2022 07:30:07 Hours

ஓய்வுபெறும் 62 வது படைப்பிரிவின் தளபதிக்கு வாழ்த்துகள்

இராணுவத்தில் 33 வருடங்களுக்கும் மேலாக தனது சேவையை நிறைவு செய்து ஓய்வுபெற்றுச்செல்லும் 62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர, செவ்வாய் (5) இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, மேஜர் ஜெனரல் உபாலி குணசேகரவின் அர்ப்பணிப்புமிக்க பணிகள் மற்றும் அவரது படையணியான இலங்கை பீரங்கி படையணியின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு மற்றும் பணிகள் குறித்தும் பாராட்டினார்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் அயராத மற்றும் அர்ப்பணிப்புடன் சேவைகளை இராணுவத் தளபதி நன்றியுடன் நினைவு கூர்ந்தார். மற்றும் இராணுவத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் போது இராணுவத்தின் நலனுக்காக அவர் ஆற்றிய சேவைகள் குறித்தும் பாராட்டினார்.

இராணுவத்திலிருந்து விடை பெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்காலத் திட்டங்களை இராணுவத் தளபதி கேட்டறிந்ததுடன் நிகழ்வில் கலந்துகொண்ட மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில யோசனைகளைப் பகிர்ந்து கொண்டார். அவரது மகன் கடல் பொறியாளராக பணிபுரிகிறார் மற்றும் அவரது மகள் தற்போது கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை தொடர்கிறார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி போர்க்களத்தில் இருந்தபோது, குடும்ப விவகாரங்களில் அவரது மனைவியான திருமதி குணசேகர அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பையும், குழந்தைகளை தைரியமாக வளர்த்ததையும் அவர் பாராட்டினார்.

ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரி, இராணுவத் தளபதியின் அன்பான வாழ்த்துக்களுக்கும் சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததுடன், தனது மூன்று தசாப்த கால பணியின் போது தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஊக்கத்தைப் பற்றி குறிப்பிட்டார். கலந்துரையாடலின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் உபாலி குணசேகரவுக்கு பாராட்டுச் சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

இராணுவ தலைமையகத்தை விட்டு வெளியேறும் முன், அதே சந்தர்ப்பத்தில் குடும்பத்தினருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் உபாலி குணசேகரவின் சுருக்கமான விபரம் இங்கே

அவர் 1988 இல் இராணுவத்தில் கெடட் அதிகாரியாக இணைக்கப்பட்டுள்ளதுடன், 6 வது இலங்கை பீரங்கி களப் படையணி சிப்பாய்களின் தளபதி,, பெட்டரி கெப்டன் போன்ற பல முக்கியமான நியமனங்களை வகித்தார். மேலும் இலங்கை பீரங்கி படையணியின் 4,8 வது களப் மற்றும் 10 வது மெட் படையணி தலைமையக பெட்டரி தளபதி, இலங்கை பீரங்கி படையணியின் 8 வது கள படையணி தலைமையக பெட்டரி தளபதி, இலங்கை பீரங்கி 8 வது கள படையணியின் இரண்டாவது கட்டளை அதிகாரி, 4 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி, 563 வது காலாட்படை பிரிகேட் தளபதி, 221 வது காலாட்படை படைபிரிவு தளபதி , 142 வது காலாட்படை தளபதி, 62 வது காலாட் படைபிரிவின் தளபதி போன்ற பதவிகளையும் வகித்தார்.

அதேபோல்,பதவி நிலை மற்றும் பயிற்றுவிப்பாளர் நியமனங்களில் புலனாய்வு அதிகாரி, 6 வது கள இலங்கை பீரங்கிப் படையணி அதிகாரி கட்டளை (நிர்வாகம்), சிறப்புப் படையணி பயிற்சி பாடசாலை பொது பதவி நிலை அதிகாரி 1, 21 வது காலாட்படை படைப்பிரிவு, இராணுவத் தலைமையக பொது பதவி நிலை அதிகாரி 1 (திட்டம்) , 61 மற்றும் 22 வது காலாட்படை படைப் பிரிவு தலைமையகங்களின் கேணல் பொது பதவி நிலை அதிகாரி,கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொது பதவி நிலை அதிகாரி , இராணுவப் பயிற்சிப் பாடசாலை – மதுருஓயா அதிகாரி பயிற்றுவிப்பாளர், பீரங்கி பாடசாலை - மின்னேரியா பயிற்றுவிப்பாளர் கன்னேரி பொறுப்பதிகாரி, பீரங்கி பாடசாலையின் பிரதம பயிற்றுவிப்பாளர் – மின்னேரியா போன்ற பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை இராணுவ எகடமியில் அடிப்படை கெடட் பயிற்சி, அதிகாரிகள் உயர் உடற் பயிற்சி பாடநெறி - பனாகொட, ஆரம்ப பீரங்கி இளம் அதிகாரி பாடநெறி - பீரங்கி படையணி மின்னேரியா பாடசாலை, காலாட்படை இளம் அதிகாரி பாடநெறி - மதுருஓயா, பீரங்கி படையணி அதிகாரிகள் உயர்நிலைப் பாடநெறி - மின்னேரியா, பீரங்கி இளம் அதிகாரிகள் பாடநெறி - இந்தியா படையணி சர்வே அதிகாரிகள் பாடநெறி - இந்தியா பீரங்கி இளம் அதிகாரிகள் பாடநெறி – இந்தியா, 152 மிமீ பீரங்கி படையணி - சீனா, மிட்-கேரியர் பாடநெறி - பாகிஸ்தான், லோங் கன்னெரி பதவி நிலை - இந்தியா, பிரிவு தளபதி பதவி நிலை பாடநெறி- பங்களாதேஷ் மற்றும் ROE பட்டறை – அவுஸ்திரேலியா ஆகிய உள்நாட்டு வெ ளிநாட்டு பாடநெறிகள் மற்றும் பயிற்சிகளை பெற்றுள்ளார். அவர் பல டிப்ளோமாக்கள் மற்றும் ஏனைய சிவில் பாடநெறிகளையும் தொடர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.