Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th May 2021 19:42:11 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் கந்தனாராச்சி அவர்களின் சேவைக்கு பாராட்டு

இலங்கை இராணுவ சேவை படையின் படைத் தளபதியும் இராணுவ விசாய மற்றும் வால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் இந்திரஜித் கந்தனாராச்சி அவர்களின் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான உன்னத சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதற்கு முன்னதாக புதன்கிழமை (5) இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் பாராட்டப்பட்டார்.

இராணுவ உறுப்பினர்களின் நன்மை பயக்கும் வகையில் அண்மைய காலங்களில் விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமான இலங்கை இராணுவ சேவை படை தயாரித்த பெருமை வாய்ந்த வீரர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் கந்தனாராச்சி அயராது உழைத்து விவசாயத்திலும் கால்நடைகளிலும் பல புதிய முக்கிய அம்சங்களைச் சேர்த்துள்ளார்.

"இராணுவத்தில் விவசாய மற்றும் கால்நடைத் துறைகளை மேம்படுத்துவதற்கான உங்களது விசுவாசம், அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்பு குறிப்பிடத்தக்கது, படைத் தளபதியாக உங்களது படையணியின் வளர்ச்சிக்காக நீங்கள் அறிமுகப்படுத்திய திட்டங்களினால் படையணி மட்டுமல்லாது முழு இராணுவமும் பயனடைகின்றது அதற்காக எனது முழுமையான தகுதியானவராகின்றீர்கள் "என இராணுவத் தளபதி கருத்து தெரிவித்தார்

சுருக்கமான உரையாடலின் போது ஜெனரல் சவேந்திர சில்வா மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகளைப் பாராட்டியதுடன் ஓய்வுபெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் இந்திரஜித் கந்தனாராச்சியுடன் இராணுவம் மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியில் அவரது பல முக்கிய நியமனங்கள் மற்றும் பணிகள் குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

விடைப்பெறும் சிரேஸ்ட அதிகாரி இராணுவத் தளபதியின் விருப்பங்களுக்கும் பாராட்டுகளுக்கும் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்தார். சந்திப்பின் முடிவில் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெறும் சிரேஸ்ட அதிகாரிக்கு பாராட்டு மற்றும் பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு பரிசு வழங்கினார்.

விவசாய மற்றும் கால்நடை பணிப்பாளர் நாயகமாக ஓய்வு பெற்ற சிரேஸ்ட அதிகாரி முட்டை உற்பத்தி, மிளகாய் வளர்ப்பு, மாம்பழ உற்பத்தி, உப்பு உற்பத்தி, பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் தூய பால், கோழி வளர்ப்பு போன்றவற்றை இராணுவத்தின் பயன்பாட்டிற்கான திட்டங்களைத் தொடங்குவதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறுப்பிடத்தக்கது.