01st May 2025 20:37:14 Hours
இலங்கை இராணுவத்தில் இருந்து 34 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் எம்கேஎல்ஏ டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 ஏப்ரல் 30 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் எம்கேஎல்ஏ டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் 1991 நவம்பர் 17 ஆம் திகதி, கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் பாடநெறி 09 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1993 நவம்பர் 22 இரண்டாம் லெப்டினன் நிலையில் கஜபா படையணியில் நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2025 ஜனவரி 18 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்த்தப்பட்டார்.
சிரேஷ்ட அதிகாரி, 2025 மே 05 ம் திகதி நிரந்தர படையில் இருந்து தனது 55 வயதில் ஓய்வு பெறவுள்ள நிலையில், தற்போது அவர் இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதியாக பதவி வகிக்கின்றார்.
தனது இராணுவ வாழ்க்கையில், 8 வது கஜபா படையணியின் குழு தளபதி மற்றும் அதிகாரி கட்டளை, 563 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 3 (செயல்பாடுகள் மற்றும் பயிற்சி), இலங்கை இராணுவ பதவிதாரிகள் கல்லூரியின் அதிகாரி பயிலிளவல் பிரிவின் அதிகாரி பயிற்றுவிப்பாளர் மற்றும் அதிகாரி கட்டளை, 531 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் பிரிகேட் மேஜர், பாதுகாப்பு அமைச்சு சேவை வனிதையர் பிரிவின் பணி நிலை அதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் உதவி இராணுவ தொடர்பு அதிகாரி, ஹைட்டி ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் நிலைப்படுத்தல் பணியின் பணி நிலை அதிகாரி 1 (மூலோபாய இயக்கங்கள்) போன்ற முக்கிய பதவிகளை வகித்தார்.
மேலும், 1 வது கஜபா படையணியின் அதிகாரி கட்டளை, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணி நிலை கல்லூரியின் பயிற்சி பணி நிலை அதிகாரி, இராணுவ தலைமையகத்தின் இராணுவத் தளபதியின் இராணுவ உதவியாளர் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் (பாதுகாப்பு ஒருங்கிணைப்பு), 213 வது பிரிகேட் தளபதி, இராணுவத் தலைமையகத்தின் இராணுவச் செயலாளர் பிரிவின் உதவி இராணுவச் செயலாளர் 2 போன்ற முக்கிய பதவிகளை வகித்த அவர் இறுதியாக இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவன தளபதியாகவும் அவர் பணியாற்றினார்.
சிரேஷ்ட அதிகாரியின் போர்க்கள துணிச்சலுக்காக ரண சூர பதக்கம் மற்றும் சேவையில் அவரது முன்மாதிரியான சேவைக்கு உத்தம சேவா பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவர் தனது பணிக்காலம் முழுதும் அதிகமான உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு இராணுவப் பட்டபடிப்புகளை முடித்துள்ளார். குழு தளபதிகள் பாடநெறி, பிரிவின் நிர்வாக பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுதங்கள் (அதிகாரிகள்) பாடநெறி, சிரேஷ்ட பணிநிலை பாடநெறி, அடிப்படை குறிபார்த்து சுடல் பாடநெறி, மற்றும் இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை கல்லூரியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்பட்ட ஆயுத மோதல் சட்டம் பாடநெறி, மேலும் உலகளாவிய அமைதி நடவடிக்கை முயற்சி ஐக்கிய நாடுகள் சபையின் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பாடநெறி,பாகிஸ்தானில் இளம் அதிகாரிகள் தந்திரோபாய பாடநெறி, இந்தியாவில் சிரேஷ்ட கட்டளை பாடநெறி, பாகிஸ்தானில் கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறி மற்றும் அமெரிக்காவில் சர்வதேச பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறி ஆகியவற்றை பயின்றுள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் கலை இளங்கலை (பாதுகாப்பு ஆய்வுகள்) உட்பட உயர் கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளையும் பெற்றுள்ளார்.