15th March 2025 13:43:08 Hours
இலங்கை இராணுவத்திலிருந்து 36 வருட சிறப்புமிக்க சேவையாற்றி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் ஜே.பீ.சீ பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் 2025 மார்ச் 11 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.
இச்சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பணிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அவரது பணிக்காலம் முழுவதும் அவருக்கு ஆதரவளிப்பதில் அவரது குடும்பத்தினர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் அவர் பாராட்டினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் ஜே.பீ.சீ பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் 1989 ஜூலை 14ம் திகதி பாடநெறி இல 32 இன் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 1991 ஜனவரி 19ம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை சிங்க படையணியில் நியமிக்கப்பட்டார். பின்னர், சிரேஷ்ட அதிகாரி 1991 பெப்ரவரி 01 அன்று விஷேட படையணிக்கு மாற்றப்பட்டார்.
தனது இராணுவ சேவைக் காலத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு படிப்படியாக உயர்த்தப்பட்ட அவர் 2022 ஓகஸ்ட் 03ம் திகதி அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்த்தப்பட்டார். சிரேஸ்ட அதிகாரி 2025 மார்ச் 19 அன்று தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறுவதற்கு முன்பு, வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் இலங்கை விஷேட படையணியின் படைத் தளபதி ஆகிய பதவிகளை வகிக்கின்றார்.
தனது பணிக்காலம் முழுவதும், 1 வது சிங்க படையலகின் குழுத் தளபதி, 1 வது விஷேட படையணியின் குழு கட்டளை அதிகாரி, 1 வது விஷேட படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி, 1 வது விஷேட படையணி ஆதரவு கட்டளை அதிகாரி, விஷேட படையணி பயிற்சி பாடசாலையின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர், 3 வது விஷேட படையணி கட்டளை அதிகாரி, 1 வது விஷேட படையணி இராடாம் கட்டளை அதிகாரி, 1 வது விஷேட படையணி மற்றும் 4 வது விஷேட படையணி கட்டளை அதிகாரி, விஷேட படையணி பயிற்சி பாடசாலை கட்டளை தளபதி, விஷேட படையணி தலைமையக பொதுப்பணிநிலை அதிகாரி 1 செயற்பாடுகள், இராணுவ பயிற்சி பணிப்பகத்தின் பொதுப்பணிநிலை அதிகாரி 1 உள்நாட்டு பயிற்சிகள், லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை கட்டளை தளபதி, விஷேட படையணி தலைமையக பிரதி நிலைய தளபதி, விஷேட படையணி தலைமையக நிலைய தளபதி, விஷேட படையணி பிரிகேட் தளபதி, முதலாம் படை பிரிகேடியர் பொதுப்பணி, 57 வது காலாட் படைப்பிரிவு தளபதி, விஷேட படையணி படைத்தளபதி மற்றும் வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
அவரது போர்க்களத்தில் துணிச்சலைப் பாராட்டி சிரேஷ்ட அதிகாரிக்கு ரண விக்கிரம பதக்கம் ரண சூர பதக்கம் ஆகியன வழங்கப்பட்டுள்ளது.
அவர் தனது இராணுவ வாழ்க்கையில், விஷேட படையணி ஆரம்ப பாடநெறி, சிறப்பு செயற்பாடு குழு பாடநெறி, ஆரம்ப புலனாய்வு பாடநெறி, படையணி தலைமையக சமிக்ஞை அதிகாரி பாடநெறி, நெடு தூர உளவு ரோந்துப் பயிற்சிப் பாடநெறி, படையணி கணக்கியல் அதிகாரி பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, கணனி பாடநெறி, கட்டளை அதிகாரி பாடநெறி மற்றும் ஆரம்ப பரசூட் பாடநெறி இந்தியா ஆகிய உள்நாட்டு வெளிநாட்டு கற்கைகளையும் பயின்றுள்ளார். மேலும், அவர் கனிஷ்ட கட்டளை பாடநெறி இந்தியா, இன்டர்மீடியட் கமாண்ட் புரோகிராம் சீனா மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி பாடநெறி இந்தியா ஆகியவற்றினையும் பயின்றுள்ளார்.