Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd December 2021 09:42:27 Hours

ஓய்வுபெறும் தலைமைக் களப் பொறியாளரின் பணிகளுக்கு பாராட்டு

இராணுவத்தின் 12 வது தலைமை கள பொறியியலாளரான மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர அவர்கள் இராணுவ சேவையிலிருக்கு ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள நிலையில், அவரையும் அவரது குடும்ப அங்கத்தவர்களையும் செவ்வாய்க்கிழமை (21) இராணுவ தலைமையத்திலுள்ள தனது அலுவலகத்திற்கு அழைப்பித்திருந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் மேற்படி சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

ஓய்வுபெறும் மேற்படி அதிகாரி தேசத்தை கட்டியெழுப்புவதற்காக ஜனாபதியவர்களால் பணிக்கப்ட்ட 52 திட்டங்கள், 11 சிறப்பு திட்டங்கள், 100,000 கிமீ வீதி திட்டங்கள், 12 குளங்களை புனரமைக்கும் திட்டங்களில் மேற்படி சிரேஷ்ட அதிகாரியால் வழங்கப்பட்ட அர்பணிப்பான சேவைக்கும் தளபதியவர்கள் பாராட்டு தெரிவித்தார். அதேபோல் சந்த ஹிரு சேய மற்றும் 'தீகவாப்பிய' தூபிகளின் நிர்மாண பணிகள், கைத்தொழில் மேம்பாடுச் பணிகள் , மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள், அத்தியவசிய பொதுச் சேவைகளை மேம்படுத்தல், புதிய பாதுகாப்பு தலைமையக வளாக தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அர்பணிப்பான சேவை மற்றும் பல்வேறு குறிப்பிடத்தக்க பணிகளில் மேற்படி அதிகாரியின் அர்பணிப்புடன் கூடியதான வகிபாகம் தொடர்பிலும் தளபதியவர்கள் நினைவுகூர்ந்தார்.

35 வருடங்களுக்கும் மேலாக சேவையில் ஈடுபட்டுள்ள நீங்கள், இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளுக்கு ஊக்கம் மற்றும் உத்வேகத்தின் ஊற்றுமூலமாக இருந்தீர்கள், 35 வருடங்களுக்கு மேலான இராணுவ சேவைக்காலத்தில் ஏனைய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு முன்னுதாரணமாக இந்த அதிகாரி பணியாற்றியிருந்தாகவும் தளபதியவர்கள் சுட்டிக்காட்டினார். மேலும் அவருடைய பொறுப்பான பணிகள் ஓர் அதிகாரியிடம் இருக்க வேண்டிய நம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் உயர் பண்புகளுக்கான எடுத்துக்காட்டாகும் அதனால் மேற்படி பணிகள் அனைத்தும் இளம் அதிகாரிகளினாலும் பாராட்டப்படுகின்ற எனவும், தொற்று நோய்கள் மற்றும் ஏனைய எந்தவொரு நெருக்கடி நிலைமைகளிலும் சிப்பாய்கள் பாதிப்புக்களை எதிர்கொள்ள கூடாது என்ற எண்ணத்துடன் மேற்படி அதிகாரி ஆற்றிய சேவை அனைவராலும் மதிக்கப்படுகின்றது எனவும் இராணுவ தளபதியவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

அதனையடுத்து மேற்படி அதிகாரி 35 வருடங்களுக்கும் மேலான முன்மாதிரியான இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் அவருடைய எதிர்கால நடவடிக்கைகளுக்கான திட்டமிடல்கள் தொடர்பிலும் ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டறிந்துகொண்டார். அதே சமயத்தில் மண்ணின் மைந்தனாக சிரேஷ்ட அதிகாரியவர்கள் ஆற்றிய சேவை தொடர்பில் அவரது குடும்பத்தாரிடமும் தளபதியவர்களால் எடுத்துரைக்கப்பட்டதோடு, அவரது சேவைக் காலத்தில் அவரின் பணிகளை இடைவிடாது முன்னெடுத்துச் செல்வதற்காக குடும்பத்தார் வழங்கிய ஆதரவு மற்றும் அவர்களது அர்பணிப்புக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

அதனைடுத்து ஓய்வு பெறும் தலைமைக் களப் பொறியியலாளர் அவரது சேவைக்காலத்தில் இராணுவ தளபதியிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளை கூறிக்கொண்டதோடு, தோல்வியற்ற தலைமைத்துவமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் கீழ் இராணுவத்தின் எதிர்கால திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இதன்போது ஆசிரியையான மனைவி திருமதி ஷிரோமி அமரசேகர அவரது மகன் மினுரா மற்றும் மகள் தேனுரி ஆகியோருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்ட தளபதி அவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார்.

மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர அவர்கள் 24 ஜூன் 1985 இல் இராணுவத்தில் இணைந்தார். இலங்கை மற்றும் பாக்கிஸ்தானில் வெற்றிகரமாக பயிற்சிகளை நிறைவு செய்த பின்னர், 01 ஜனவரி 1987 இல் இரண்டாவது லெப்டினனாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் பொறியியல் படையின் படைத் தளபதியாகவும் இலங்கை இராணுவத்தின் தலைமை களப் பொறியியலாளராகவும் இருந்து ஓய்வுபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

35 வருடங்களுக்கும் மேலான அவரது கலங்கமற்ற இராணுவ சேவையில், அவர் இலங்கை இராணுவத்தில் பல கட்டளை, பணிநிலை மற்றும் ஆலோசகர் நியமனங்களை வகித்துள்ளார். குழு கட்டளை அதிகாரி , புலனாய்வு அதிகாரி, நிறைவேற்று நிர்வாக அதிகாரி, அணிவகுப்பு கட்டளை அதிகாரி, தலைமையக அணி கட்டளை அதிகாரி, 7 வது கள பொறியில் சேவைப் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 7 வது கள பொறியில் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி போன்ற நியமனங்களை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேநேலம் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர அவர்கள் குருநாகல் பகுதித் தலைமையகம், 6 வது காலாட்படை பிரிகேட் பணிநிலை அதிகாரி III, மற்றும் 6 வது காலாட்படை பிரிகேட் மேஜர், இராணுவ போர்க்கருவிகள் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி II, இராணுவ தலைமையக பொறியியல் சேவை படையணியின் பணிநிலை அதிகாரி II, இராணுவ தலைமையக பொறியியல் சேவை படையின் பணிநிலை அதிகாரி I, பொறியியல் சேவை படையின் நிலையத் தளபதி உள்ளிட்ட நியமனங்களோடு இராணுவ பொறியியல் சேவை படையணி பயிற்சி கல்லூரியின் தளபதி, 65 வது படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி மற்றும் தலைமை கள பொறியியல் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம் வகித்துள்ளார்.

மேலும் 571, 583 பிரிகேடுகளின் தளபதியாகவும், பொறியியல் பிரிகேட் மற்றும் வவுனியா 56 வது படைப்பிரிவின் தளபதியாகவும் நியமனங்களை வகித்தார். மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர தனது இராணுவ சேவைக் காலத்தில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளையும் பயின்றுள்ளார். அவை தொடர்பிலான விவரங்கள் வருமாறு,உடற்பயிற்சி அதிகாரிகள் கற்கை இந்தியா, இளம் அதிகாரிகளுக்கான கற்கை இந்தியா, பொறியாளர் உபகரண கற்கை இந்தியா, சிரேஷ்ட அதிகாரிகளுக்கான பாடநெறி இந்தியா, மத்திய தொழிலாண்மை கற்கை பாகிஸ்தான், பொறியாளர் தொழிலாண்மை கற்கை - அமெரிக்க, ஐக்கிய நாடுகளின் இராணுவ கண்காணிப்பாளர் கற்கை - மலேசியா, நவீன உபாயங்களுக்கான அமைப்பு மற்றும் திட்ட முகாமைத்துவம் தொடர்பிலான கற்கைநெறியை தாய்லாந்து பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.

மேலும், மொங்கோலியாவின் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய பசுபிக் மையத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர், இராணுவ வழங்கல் மற்றும் வாகனம் குறித்த ஆய்வுக்காக சீனாவிற்கு சென்றிருந்தார். அதேபோல், ஐக்கிய இராச்சியத்தில் ஆளில்லா தரைப்படை வாகனம் (UGV) பற்றிய கற்றையை தொடர்ந்தார். இராணுவப் பொறியியலில் துறை சார்ந்த அவரது பரந்த அனுபவம் மற்றும் அறிவைக் கொண்டு மாலைத்தீவுகளின் ஆயுதப் படைகளுக்கான உயர் வெடிபொருள் செயழிழப்பு ( EOD) பாடநெறியில் இராணுவத் தளபதியைப் பிரதிநித்துவப்படுத்தி கலந்துகொள்ளும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

அதேபோல் உள்நாட்டில் அவர் கொழும்பில் இராணுவக் கல்வியில் அடிப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கான பாடநெறி, தியத்தலாவவில் உள்ள கனிஷ்ட பணியாளர்களுக்கான பணி நிலை அதிகாரி பாடநெறி, பனாகொடையில் தந்திரோபாயங்கள் மற்றும் கட்டளை அதிகாரிகள் பாடநெறி, கொழும்பில் கணினி பாடநெறி, தியத்தலாவவில் படைப்பிரிவு கட்டளை அதிகாரிகள் பாடநெறி, இராணுவ பொறியியல் கல்லூரியில் வெடிகுண்டு செயலிழப்பு பாடநெறி, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் மற்றும் முகாமைத்துவ பாடநெறி, அமெரிக்கா, இலங்கையின் ஆர்ஓஎன்சீஓ (RONCO) ஆலோசனை ஒத்துழைப்புடன், கிளிநொச்சியில் உளவுத்துறை சுற்றுச்சூழல் ஆராய்வு பாடநெறி, கிளிநொச்சியில் தகவல் செயற்பாடு மற்றும் சிவில் விவகார பாடநெறி, கிளிநொச்சியில் மூலோபாய தலைமைத்துவ பாடநெறி, துறைமுக பாதுகாப்பு கடமைகளின் போது ஆபத்தான பொருட்களை கண்டறிதல் மற்றும் இலங்கையிலுள்ள துறைமுகம் மற்றும் கடல்சார் கல்வியற் கல்லூரியின் சர்வதேச கடல்சார் செயற்பாடுகள் தொடர்பிலான கற்கைநெறி, கொழும்பு பல்கலைக்கழகத்தில் அணு பாதுகாப்பு பற்றிய அறிமுக பாடநெறி, அணு அல்லது கதிரியக்க அவசரநிலை, இலங்கையில் உள்ள அணுசக்தி ஒழுங்குபடுத்தல் மற்றும் தயார்நிலை பாடநெறி ஆகியவற்றையும் தொடர்ந்துள்ளார்.

அவர் இந்தியாவில் உள்ள டேவி அஹிலியா பல்கலைகழகத்தில் முதுநிலை பாதுகாப்பு முகாமைத்துவ டிப்ளோமா, அமெரிக்காவில் பொறியியல் டிப்ளோமா, இலங்கையில் ஆலோசனை டிப்ளோமா, ஜகார்த்தா இந்தோனேசியா பல்கலைக்கழகத்தில் தேசிய மூலோபாய மற்றும் பின்னடைவு ஆய்வுகளில் முதுகலைப் பெற்றுள்ளார்.

அதேபோல், அவரது கௌரவமான சேவை மற்றும் திறன், தகைமை மற்றும் முன்மாதிரியான நடத்தை ஆகியவற்றுக்காக "உத்தம சேவா பதக்கம்" வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தேசத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி 11க்கும் மேற்பட்ட சேவைப் பதக்கங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர் விளையாட்டு துறையில் மிகவும் ஆர்வம் மிக்கவர் என்பதோடு, அவரின் சிறந்த துப்பாக்கிச்சுடும் திறன் காரமாக பொறியியல் படையினால் அவருக்கு மார்க்ஸ்மேன் கௌரவிப்பும் வழங்கப்பட்டது.