Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd June 2023 21:55:21 Hours

ஓய்வுபெறும் சிரேஷ்ட வழங்கல் அதிகாரியின் சேவைக்கு பாராட்டு

வடமத்திய முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதியும், இலங்கை இராணுவ போர்க் கருவிப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஈபீ வீரசிங்க வீஎஸ்வீ யூஎஸ்பீ ஏடிஓ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தில் சேவயைாற்றி ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியுடனான சந்திப்பின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், இராணுவ போர்க் கருவிப் படையணியில் அனுபவம் வாய்ந்த அதிகாரியாக அவரது பாராட்டத்தக்க பணியின் போது குறிப்பிடத்தக்க மைல்கற்களை நினைவு கூர்ந்தார். அவரது அர்ப்பணிப்பு மிக்க சேவை மற்றும் பல்வேறு பொறுப்புகளை தவறாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற செயல்பாட்டிற்காக இராணுவ தளபதி பாராட்டினார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தின் போது ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியின் பங்களிப்பு மற்றும் மதிப்புமிக்க பாத்திரங்கள் பற்றிய நினைவுகளைப் புதுப்பித்ததுடன், மே 2009 க்கு முன்னர் மிக உயர்ந்த திறன் கொண்ட ஒரு வழங்கல் அதிகாரியாக இருந்தமைக்கு அன்றைய அழைப்பாளருடன் சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

வடமத்திய முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதியும், இராணுவ போர்கருவிப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஈபீ வீரசிங்க வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள், தனது பதவி காலத்தில் தளபதியால் தனக்கு வழங்கப்பட்ட வழிகாட்டிதல்கள் மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அவருடைய பிள்ளைகளுடன் சில இன்பங்களைப் பகிர்ந்துகொண்ட தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

இச்சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கும் அவரது பிள்ளைகளுக்கு விசேட பரிசுகளுடன் பாராட்டு மற்றும் பாராட்டு சின்னமாக விசேட நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் எம்ஈபீ வீரசிங்க வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிளிழவல் அதிகாரியாக இணைந்து கொண்டார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் பாடநெறி இல. 06ல் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாவது லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டதுடன், 05 ஒக்டோபர் 1990 இல் இலங்கை இராணுவ போர்க் கருவிப் படையணியில் நியமிக்கப்பட்டார்.

இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்தப்பட்ட பின்னர், அவர் 14 செப்டம்பர் 2021 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமத்திய முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதியும், இராணுவ போர்க் கருவிப் படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகித்ததுடன், 211 வது காலாட் பிரிகேடின் பாதுகாப்பு படையலகின் கட்டளை அதிகாரி, கண்டி முன்னரங்கு ஆயுதக் களஞ்சியத்தின் கட்டளை அதிகாரி, மின்னேரியா தள ஆயுதக் களஞ்சியத்தின் இரண்டாம் கட்டளை அதிகாரி, மட்டக்களப்பு முன்னரங்கு ஆயுதக் களஞ்சியத்தின் கட்டளை அதிகாரி, 1 வது இராணுவ போர்க் கருவிப் படையணியின் நிறைவேற்று அதிகாரி, 55 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட போர்க் கருவி அதிகாரி, இராணுவத் தலைமையகத்தின் போர்க் கருவிப் பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி 2 (துறைமுகம்), இராணுவத் தலைமையகத்தின் போர்க் கருவிப் பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி 2 (வெளிநாட்டு விவகார கிளை), இராணுவ போர்க் கருவிப் படையணி தலைமையகத்தின் பொதுப்பணி அதிகாரி 2, ஹைட்டி ஐக்கிய நாடுகளின் ஸ்திரப்படுத்தல் பணியின் இலங்கை படையலகு வழங்கல் அதிகாரி, 1 வது இராணுவ போர்க் கருவிப் படையணி ரசீது பிரிவு கட்டளை அதிகாரி, 3 வது இராணுவ போர்க் கருவிப் படையணியின் இரண்டாவது கட்டளை அதிகாரி, 61 வது காலாட் படைப்பிரிவு பணி நிலை அதிகாரி 1 (நிர்வாகம் மற்றும் விடுதி), 5 வது இராணுவ போர்க் கருவிப் படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையகத்தின் போர்க் கருவிப் பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி 1, (ஒதுக்கீடு, கொள்முதல் மற்றும் அபிவிருத்தி கிளை), 59 வது காலாட் படைப்பிரிவு கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி, யாழ். பாதுகாப்பு படைத் தலையைகத்தின் கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி, பாதுகாப்புத் தலைமையகத்தின் கொள்முதல் பணிப்பாளர், மத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துக் களஞ்சியத்தின் தளபதி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலையைகத்தின் கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி, இராணுவத் தலைமையக போர்க் கருவிப் பணிப்பகத்தின் பணிப்பாளர், இலங்கை இராணுவ ஜூடோ குழுவின் தலைவரும், போர்க் கருவி பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் எம்ஈபீ வீரசிங்க வீஎஸ்வீ யூஎஸ்பீ ஏடிஓ அவர்கள் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளைப் பின்பற்றியுள்ளார். அதில் படையலகு கட்டளை அதிகாரி, தந்திரோபாய பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுதப் பாடநெறி, அதிகாரிகளின் சிறப்புப் பாடநெறி, அடிப்படை ஆயுத முகாமைத்துவப் பாடநெறி - இந்தியா, படையலகு தீயணைப்பு அதிகாரிகள் பாடநெறி - பாகிஸ்தான், வெடிமருந்து தொழில்நுட்ப அதிகாரி பாடநெறி - பாகிஸ்தான், சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரி பாடநெறி - இந்தியா, ஐக்கிய நாடுகளின் வழங்கல் அதிகாரி பாடநெறி - நேபாளம் மற்றும் உயர் ஆயுத முகாமைத்துவ பாடநெறி – இந்தியா போன்ற பாடநெறிகளையும் பின்பற்றியுள்ளார்.

இலங்கையின் களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், மலேசியாவின் ஆசிய ஈ பல்கலைக்கழகத்தில் விநியோகச் முகாமைத்துவத்தில் முதுமாணி பட்டமும் பெற்றுள்ளார்.