Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th October 2023 22:34:04 Hours

ஓய்வுபெறும் சிரேஷ்ட பீரங்கி வீரருக்கு இலங்கை பீரங்கி படையணியில் பிரியா விடை

ஞாயிற்றுக்கிழமை (08 ஒக்டோபர்) சம்பிரதாய முறைகளுக்கு மத்தியில் வெளியேறும் நிதி முகாமைத்துவ கிளையின் பணிப்பாளர் நாயகமும் இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எஸ்.எம் அபேசேகர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்களுக்கு பனாகொட இலங்கை பீரங்கி படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்படுவதற்கு முன் இலங்கை பீரங்கி படையணியின் நிலைய தளபதியினால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, படையணியின் உயிரிழந்த வீரர்களுக்கு நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அணிவகுப்பு சதுக்கத்தில் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை பீரங்கி படையணி படையினர்களுடன் குழு படம் எடுத்துகொண்டார், பின்னர், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட் உணவகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் பங்கேற்ற அவருக்கு அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. பின்னர் மதிய உணவிருந்துபசாரத்தில் பங்கேற்றார்.

அன்றைய நிகழ்வின் நிறைவாக, இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களால் முறையான இரவு உணவு விருந்து வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் இலங்கை பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்து கொண்டனர்.