Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st December 2021 21:00:02 Hours

ஓய்வுபெறும் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியின் சேவைகளுக்கு பாராட்டு

35 வருட அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த சேவையின் பின்னர் இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறும் முன்னாள் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை பீரங்கிப்படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (21) அவரது குடும்பத்தாருடன் இராணுவ தலைமையகத்திற்கு அழைப்பிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பணியாற்றிய விதம் தொடர்பி்ல் நினைவுகூர்ந்ததோடு, அவர்களின் இராணுவ வாழ்க்கையின் போதான மகிழ்ச்சியான அனுபவங்கள் மற்றும் ஏனைய நினைவுகளையும் பரிமாறிக் கொண்டார். அதேபோல் பல வருடங்களாக புலிகளின் கெடுபிடிகளின் கீழ் இருந்த மக்களையும் நாட்டையும் மீட்டெடுத்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலும், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்குமான நடவடிக்கைகளின் போதான ஓய்வுபெறும் தளபதியின் அச்சமின்றிய நடவடிக்கைகள், பீரங்கி படையின் தளபதியாக அதன் வளர்ச்சிக்கு ஆற்றறிய பணிகள் என்பவற்றோடு அவருடைய அர்பணிப்பான பணிகளையும் தளபதியவர்களில் நினைவுகூர்ந்தார்.

மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக இருந்த காலப்பகுதியில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரைக்கமைவாக அதிமேதகு ஜனாதிபதியவர்களினால் 8 செப்டம்பர் 2021 மாதம் முதல் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜெனரல் சவேந்திர சில்வா, 35 வருடங்களுக்கும் மேலாக முன்மாதிரியான சேவை மற்றும் அர்ப்பணிப்புடன் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவரது எதிர்கால முயற்சிகள் மற்றும் அவரது ஏனைய திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கேட்டறிந்தார். ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரி ஓர் உண்மையான மண்ணின் மகனாக எப்படி நாட்டிற்காக உழைத்தார் என்பதை அவர் தனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறினார்.

மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொடவின் விவரம் வருமாறு

மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட கம்பளை புகழ்பெற்ற விக்கிரமபாகு மத்திய கல்லூரியின் பெருமைமிக்க மாணவராவார். 1986 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி பயிலிளவல் அதிகாரி பாடநெறி எஸ்எஸ்சி 11 இன் கீழ் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டார். லெப்டினண் ஆக அதிகாரவாணைக்கு நியமிக்கப்பட்டார். தனது பாடநெறியில் ஐந்தாவது இடத்திற்கு தேர்ச்சி பெற்ற அவர் இலங்கை பீரங்கிப் படைக்கு நியமனம் செய்யப்பட்டார். 1987 பெப்ரவரி 21 ஆம் திகதி 6 வது இலங்கை பீரங்கி படையணியில் இணைக்கப்பட்டார்.

அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில், அவர் பல கட்டளை , பணிநிலை மற்றும் ஆலோசகர் நியமனங்களை வகித்தார். 6, 7 மற்றும் 10 வது இலங்கை பீரங்கி படையணிகளின் படை கட்டளையாளர், துப்பாக்கி அதிகாரி, முன்னரங்க பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரி, குழு கட்டளை அதிகாரி மற்றும் அணி கட்டளை அதிகாரி ஆகிய பதவிகளை மேற்படி சிரேஷ்ட அதிகாரி வகித்துள்ளார். 11 வது இலங்கை பீரங்கி படையணியின் மற்றும் 8 வது மத்திய படையணிக்கு கட்டளை அதிகாரியாகவும் சேவையாற்றியுள்ளார். மேலும், அவர் மின்னேரியாவில் உள்ள பீரங்கி படை பயிற்சி கல்லூரியில் துப்பாக்கி பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார், பின்னர் அவர் இலங்கை பீரங்கிபடை பயிற்சி கல்லூரியின் தளபதியாக நியமனம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் இராணுவ தலைமையக வழங்கல் பணிப்பாளர் நாயக கிளை , நடவடிக்கை பணிப்பகம், 23 வது படைப்பிரிவு ஆகியவற்றின் பணி நிலை அதிகாரி தரம் I மற்றும் தரம் II, பதவிகளை வகித்துள்ளமையுடன் வழங்கல் பணிப்பாளர் நாயக கிளை, வழங்கல் பணிப்பகம் , இராணுவ தலைமையக காணி விவகாரம் மற்றும் வழங்கல், போக்குவரத்து பணிப்பகம் என்பவற்றின் கேணலாகவும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் கொடுவேகொட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது 612 மற்றும் 663 பிரிகேடுகளின் தளபதியாகவும், பின்னர் அவர் 55 வது படைப்பிரிவின் தளபதியாக நியமனம் பெற்றார். தற்போதைய நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் கொடுவேகொட இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியாக நியமனம் வகித்தார். அதே நேரத்தில், அவர் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியாகவும் நியமனம் வகிக்கிறார்.

மேஜர் ஜெனரல் கொடுவேகொட குழு கட்டளை அதிகாரி பாடநெறி (காலாட்படை பயிற்சி பாடசாலை / போர் பயிற்சிப் கல்லூரி), மத்திய தொழிலாண்மை பாடநெறி, அணி கட்டளை அதிகாரி பாடநெறி (மாதுரு ஓயா), இளம் அதிகாரிகளின் பாடநெறி (இந்தியா), அமெரிக்க சிறப்புப் படைகளுடன் வான் வழி தாக்குதல் நடவடிக்கை பாடநெறி, மத்திய தொழிலாண்மை பீரங்கி பாடநெறி (பாகிஸ்தான்), அதிகாரிகளுக்கான பீரங்கி பணிநிலை அதிகாரி பாடநெறி (பங்களாதேஷ்), படையலகு கட்டளை அதிகாரிகளுக்கான பீரங்கி பாடநெறி (பாகிஸ்தான்), பாதுகாப்பு மற்றும் தீவிர வாததிற்கு எதிரான ஆய்வுகளுக்கான ஆசிய-பசுபிக் நிலையத்தில் (அமெரிக்கா) பயங்கரவாதிற்கு எதிரான நடவடிக்கை பாடநெறி மற்றும் அனர்த்த முகாமைத்துவ பாடநெறி 2012 - ஆசிய-பசுபிக் (ஜப்பான்) இல் பன்னாட்டு ஒத்துழைப்புத் திட்டம். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு நிர்வாகத்தில் முதுகலை கலையுடன் பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பட்டம்போன்ற பல்வேறு துறைகளில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சி நெறிகளைப் பின்பற்றியுள்ளார்.