03rd September 2021 17:30:10 Hours
ஓய்வு பெறும் பிரதி இராணுவ பதவிநிலைப் பிரதானியும் ரணவிரு அப்பேரல் (பிரைவேட்) லிமிடெட் முகாமைத்துவ சபையின் தலைவரும் இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டு குழுத் தலைவருமான மேஜர் ஜெனரல் வசந்த மடோல அவர்களை பாதுகாப்பு பதவு நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (3) காலை தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார்.
இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி (SLCMP) தயாரித்த பெருமைக்குரிய வீரர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் வசந்த மாதொல, இராணுவத்தில் 35 வருடங்களுக்கும் மேலான புகழ்பெற்ற சேவைக்குப் பிறகு 07 செப்டம்பர் 2021 அன்று ஓய்வு பெறுகிறார்.
ஜெனரல் சவேந்திர சில்வா விடைப்பெறும் சிரேஸ்ட அதிகாரியுடனான சுருக்கமான உரையாடலின் போது அவரது அர்ப்பணிப்பு சேவையைப் பாராட்டி சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்ததுடன் அவரது எதிர்கால திட்டங்களையும் விசாரித்தார். மேஜர் ஜெனரல் வசந்த மடோல இராணுவம் மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படை (எஸ்எல்சிஎம்பி) ஆகியவற்றில் பல முக்கிய நியமனங்களில் பணியாற்றியுள்ளார், குறிப்பாக இராணுவத்தில் 16 ஜனவரி 1986 இல் சேர்ந்தார். அவர் 14 ஜனவரி 2021 அன்று பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் நியமிக்கப்படுவதற்கு முன்பு வழங்கல் கட்டளைகளின் தளபதியாக பதவி வகித்தார்.
சந்திப்பின் பொது ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரி, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஊக்கத்திற்கும் ஆலோசணைகளுக்கும் நன்றி தெரிவித்தார். சந்திப்பின் முடிவில், ஜெனரல் சவேந்திர சில்வா, ஓய்வு பெறுபவருக்கு பாராட்டு மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக ஒரு சிறப்பு நினைவுப் பரிசு வழங்கினார்.