Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th October 2021 09:00:31 Hours

ஓய்வுபெறவிருக்கும் மேஜர் ஜெனரல் இந்திராஜித் பண்டாரவுக்கு அவரது படையணி தலைமையகத்தில் பிரியாவிடை

இராணுவ தலைமையக காலாட் படை பணிப்பகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் இந்திராஜித் பண்டார அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான இராணுவ சேவையை நிறைவு செய்துகொண்டு ஓய்வுபெறவிருக்கும் நிலையில் அம்பேபுஸ்ஸவில் அமைந்துள்ள சிங்கப் படையணியின் தலைமையகத்தில் புதன்கிழமை (06) அவருக்கு கௌரவம் அளிக்கும் வகையில் பிரியாவிடை நிகழ்வொன்று நடத்தப்பட்டது.

இதன்போது மேஜர் ஜெனரல் இந்திராஜித் பண்டார அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, படையணியின் பிரதி நிலையத் தளபதி துளித்த பெரேரா அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் விராஜ் விமலசேன அவர்களினாலும் பிரதம அதிதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது இலங்கை சிங்கப்படை வீரர்களால் ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவமளிக்கப்பட்டது. பெருமைக்குரிய மற்றும் மரியாதைக்குரிய வகையில் வழங்கப்பட்ட கௌரவிப்பை மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார நிலையத் தளபதியுடன் இணைந்து ஏற்றுக்கொண்டார்.

இதன்போது பிரதம விருந்தினரால் போரில் உயிர் நீத்த சிங்கப்படை சிப்பாய்களின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தபட்டதோடு, அனைத்து நிலைகளுக்குமான விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

இதன்போது மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார மற்றும் அவரது பாரியார் திருமதி வத்சலா உதாரி பண்டார ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட நிகழ்வின் போது தளபதியின் சேவை மிகவும் பாராட்டப்பட்டதோடு, அதிகாரிகளுக்கான உணவகத்தில் சிறப்பு விருந்தளிக்கப்பட்டதை தொடர்ந்து சிங்கப்படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களால் பிரியாவிடை சிறப்புரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.

சிறப்புரையின் நிறைவில் இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறுவதையிட்டு மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை சிங்கப்படை அதிகாரிகள் மற்றும் படையணியின் சிப்பாய்களும் பங்கேற்றிருந்ததோடு, அவர்கள் விடைப்பெற்றுச் செல்லும் தருவாயிலும் படையனர் வீதியோரங்களில் அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.