05th December 2023 19:10:19 Hours
ஒழுக்கப் பணிப்பகம்,பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படையினருக்கு 'கைரேகை' அச்சிடும் நுட்பங்கள் தொடர்பான அறிவை வழங்கும் நோக்கத்துடன் 21 நவம்பர் 2023 பொல்ஹெங்கொட இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் ஒரு நாள் செயலமர்வு நடாத்தப்பட்டது.
இச்செயலமர்வின் ஆரம்ப உரையை இலங்கை இராணுவத்தின் ஒழுக்கப் பணிப்பகத்தின் பணிப்பாளரும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.சி.ஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் ஆற்றினார்.
கைரேகையின் வரலாறு, பகுப்பாய்வு செய்தல், ஒப்பீடு செய்தல், கைரேகை அடையாளங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் சரிபார்த்தல், கைரேகை அடையாளம் மற்றும் வகைப்படுத்தல், கைரேகையின் நடைமுறை அம்சங்கள், கொள்கைகள், குறிப்பிட்ட வகை கைரேகைகளை வகைப்படுத்துதல், தேடுதல் மற்றும் ஒப்பிடுதல் உட்பட பல விடயங்கள் இங்கு பயிற்றுவிக்கப்பட்டது. இப் பட்டறையில் நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் 66 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் பங்குபற்றினர்.
கைரேகைகள் மற்றும் தொடர்புடைய பாடப் பகுதிகளின் நுட்பங்கள் பற்றிய இராணுவப் பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் அறிவை விரிவுபடுத்துவதே செயலமர்வின் முக்கிய நோக்கமாகும்.
ஒரு நாள் பயிற்சி செயலமர்வின் பங்கேற்பாளர்கள் பங்குபற்றியதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் கேணல் ஈ.எம்.ஐ ஏக்கநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.