18th August 2021 16:17:27 Hours
லெபனானில் உள்ள நகுராவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் சேவை செய்யும் இலங்கை படை பாதுகாப்பு கம்பனியின் படையினர் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் சேவை படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்டீபல்கேஸ் மற்றும் க்ரொஸ் பிட் போட்டி நிகழ்வுகளில் இரண்டாம் இடத்தை பிடித்துக் கொண்டனர். ஸ்டீபல்கேஸ் போட்டிகளில் 4 இலங்கை வீரர்கள் பங்கேற்றிருந்த நிலையில் மேலும் இரண்டு வீரர்கள் வீரர்கள் 2021 ஜூலை 30 அன்று நகூர் தலைமையகத்தில் நடைபெற்ற க்ரொஸ் பிட் போட்டிகளில் பங்கேற்றனர்.
ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் சேவைக்கான போட்டியின் பின்னர் நாகூரிலுள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தலைமையக வளாகத்தில் மதிய போசன நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்படி இடைக்கால சேவைப்படையிலுள்ள அனைத்து குழுக்களும் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டனர். இது உலகம் முழுவதிலுமிருந்து வந்த இராணுவம் மற்றும் பொதுமக்கள் அமைதி காப்பாளர்களிடையே ஆரோக்கியம், மற்றும் உடற்தகமை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த ஏற்படுத்த கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி திட்டத்தின் பிரதித் தலைவர் திரு ஜாக் கிறிஸ்டோபைட்ஸ், பிரதி படைத் தளபதி, பிரிகேடியர் ஜெனரல் இர்வின் நில்-அயிடே எரியேட்டி, திட்டமிடல் பணிப்பாளர் செல்வி மெல்வா க்ரூச் மற்றும் பிரதம பதவி நலைப் பிரதானி அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் ஹூபர்ட் கொமாண்டர் ஆகியோர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர். இலங்கைப்படை பாதுகாப்பு நிறுவனம் உணவுப் பஸார் போட்டிகளில் பங்கேற்றிருந்த நிலையில் அங்கு வந்த அனைத்து பார்வையாளர்களுக்கும் இலங்கை உணவு வகைகள் கிடைத்தன. அதன்படி இரண்டாம் இடங்களைப் பெற்ற வீரர்களின் பெயர் பட்டியல் வருமாறு:
இரண்டாம் இடம் – ஸ்டீப்பிள்சேஸ் போட்டி
சார்ஜன் ஜீபீஜீயூ ரஞ்சன் கஜபா படையணி
சார்ஜன் கேஎம்பீஎச்கேஆர்எஸ்பீ விஜேரத்ன – கொமாண்டோ படையணி
லான்ஸ் கோப்ரல் கேஏஏஎன் குணதாச கொமாண்டோ படையணி
லான்ஸ் கோப்ரல் ஏஏஜீபி அமரசிங்க கொமாண்டோ படையணி
இரண்டாம் இடம் உடற்தகுதி போட்டி
சாஜன்ட் எஸ்ஆர்டபிள்யூபீஆர்எஸ்பீ லக்மால் – விஷேட படை
லான்ஸ் கோப்ரல் டீஎம்ஏ தீபால் குமார – இலங்கை சிங்கப்படை