29th September 2023 16:02:28 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கெளரவ கேகே மஸ்தான் அவர்களுடன் இணைந்து உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர மண்டபத்தில் வியாழக்கிழமை (செப். 21) நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைதி தின விழாவில் பிரதம அதிதியா கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் உலகளாவிய அமைதி கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி சிங்கப்பூரைச் சேர்ந்த திரு. ஆல்வின் பாங் அவர்கள் பங்கேற்றார். இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த 150 பிள்ளைகள் பாடசாலை காலணிகளைப் பெற்றுக் கொண்டதுடன், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்களால் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு முன்னதாக, முல்லைத்தீவை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றி 100 மரக்கன்றுகளை நடும் பணியை முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலமையகத் தளபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.