10th July 2021 20:21:00 Hours
தென் சூடானில் உள்ள ஐ.நா அமைதிகாக்கும் படைத் தலைமையகத்தின் கிழக்கு பிரிவு தளபதி பிரிகேடியர் தீபக் குமார் பனியா அவர்கள் அங்குள்ள SRIMED 2 ஆம் நிலை வைத்தியசாலைக்கு வியாழக்கிழமை (01) விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், வைத்தியசாலை வளாகத்தில் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
வருகை தந்த தளபதிக்கு குறித்த வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி கேணல் டிஆர்எஸ்ஏ ஜயமான அவர்கள் வரவேற்பளித்ததுடன்,சிரிமெட் வைத்தியசாலையின் ஊழியர்களை தளபதிக்கு அறிமுகப்படுத்தினார்.
அதனையடுத்து 2014 ஆம் ஆண்டு முதலான சிரிமெட் வைத்தியசாலையின் பணிகள் தொடர்பில் “பவர் பொய்ன்ட்” காட்சி மூலம் தளபதிகுக்கு விளக்கமளிக்கப்பட்ட பின்னர்.
வைத்தியசாலை வளாகத்தில் மரக் கன்று ஒன்றை நாட்டி வைக்குமாறு தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனைடுத்து தளபதியினால் வைத்தியசாலை வளாகத்தை மேற்பார்வை செய்ததையடுத்து படையினருக்கான உரையொன்றினை நிகழ்த்தியிருந்ததுடன், வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
தென் சூடானில் இயங்கும் சிரிமெட் வைத்தியசாலையின் படையினர் அவசர சிகிச்சை வழங்குதல், ஐ.நா அமைதிகாக்கும் படையினர் மத்தியில் கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல், ஓழுக்கத்தை உயர்ந்த அளவில் கடைப்பிடித்தல், மற்றும் பொது மக்களுடனான நல்லுறவு, போன்ற பணிகளில் பங்களிப்புச் செய்து வருகின்ற நிலையில் வருகைத் தந்த தளபதி விருந்தினர்கள் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.