06th September 2024 18:46:25 Hours
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை அதிகாரிகளின் பங்கேற்புடன் 2024 ஆகஸ்ட் 30 அன்று, லெபனான் நகோராவில் உள்ள ஸ்ரீ பேஸ் முகாமில் உள்ள 15 வது இலங்கை பாதுகாப்பு படை நிறுவனத்திற்கு சொந்தமான உபகரணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த காலாண்டு ஆய்வானது இலங்கை அரசாங்கத்திற்கும் லெபனான் ஐக்கிய நாட்டுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் படி, லெபனானில் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் முக்கிய மற்றும் சுய-உறுதியான உபகரணங்களின் செயல்பாட்டுத் தயார்நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த ஆய்வின் போது போர் குழு மற்றும் ஆதரவு வாகனங்கள், ஆயுதங்கள், பொருட்கள் மற்றும் நலன்புரி வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை மதிப்பீடு செய்யப்பட்டதுடன் கலந்துரையாடலுடன் நிகழ்வு நிறைவுற்றது.