Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th December 2024 13:25:54 Hours

ஐக்கிய நாடுகளின் வழங்கல் பாடநெறி - எண் 6 நிறைவு

ஐக்கிய நாடுகளின் வழங்கல் பாடநெறி - எண் 06, உலகளாவிய அமைதி செயற்பாடுகள் முன்முயற்சியின் அனுசரணையில் 13 டிசம்பர் 2024 அன்று குகுலேகங்க இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நிறைவடைந்தது.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 28 அதிகாரிகள், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகள், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகள் மற்றும் பங்களாதேஷ், இந்தோனேஷியா, மலேசியா, மங்கோலியா, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 07 வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 39 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முப்படை அதிகாரிகள் இந்த பாடநெறியை பின்பற்றினர். குழு தலைவர் உட்பட கனடாவைச் சேர்ந்த திருமதி. டிரேசி மார்ட்டினோ, நோர்வேயைச் சேர்ந்த திரு. ஸ்டீன் எலிங்சன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு. வாட்டர்ஸ் டாரில் ஸ்டீபன் மற்றும் பிரிகேடியர் ஜெனரல் (ஓய்வு) நரேஷ் சுப்பா லிம்பு ஆகிய 04 விடய நிபுணர்கள் உலகளாவிய அமைதி செயற்பாடுகள் குழுவைக் கொண்டிருந்தது.

வழங்கல் தளபதியும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈ.எம்.எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சீ ஏஏடிஓ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியதன் பின்னர் நிறைவுரை ஆற்றினார்.

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் எம்.கே.எல்.ஏ டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.