Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd October 2021 13:30:29 Hours

ஏழை மக்களிடையே மேலும் ஒக்சிமீட்டர்கள் பகிர்ந்தளிப்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 144 ஆவது பிரிகேட்டின் 2 (V) இலங்கை இலேசாயுத காலாட்படை (SLLI) படையினர் அண்மையில் இராணுவத் தளபதிக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற ஒக்சிமீட்டர்களை பத்தரமுல்ல,மாலபே,அத்துருகிரிய,கோட்டே மற்றும் கடுவலை பகுதிகளின் எழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தனர்.

இந்த நன்கொடை நிகழ்ச்சியில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மருத்துவ ஆலோசனையின் பேரில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏழைக் குடும்பங்களின் உறுப்பினர்களின் ஒக்சிஜன் அளவை அளவிடுவதற்காக இவை வழங்கப்பட்டன.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களால் 14 வது படைப்பிரிவு தளபதி மற்றும் 144 பிரிகேட் தளபதிகளுக்கு விநியோகத் திட்டத்தை முன்னெடுக்க தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.