12th April 2021 21:22:02 Hours
யாழ் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா புதன்கிழமை (7) ஏழைக் குடும்பங்களுக்கு இரண்டு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
திரு.அருமைலிங்கம் ஜெனதாஸ் மற்றும் திரு. ரமேஷ் ராஜகுமார் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு யாழ்ப்பாணம் கீரிமலை மற்றும் உடுவில் ஆகிய பிரதேசங்களில் புதிய இரண்டு வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்றார்.
புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் மற்றும் தேசிய வீட்டுவசதிகள் அதிகார சபை ஆகியவை மூலப்பொருட்களின் நிதி செலவை கூட்டாக ஏற்கும் அதே வேளை 10 வது இலங்கை பீரங்கி படை மற்றும் 9 இலங்கை இலேசாயுத காலாட் படை படையினர் இரு கட்டுமானங்களுக்கும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை வழங்கவுள்ளன.
515 பிரிகேட் மற்றும் 511 பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ் இரு வீடுகளையும் நிர்மாணிக்க இரணுவம் தேவையான மனித சக்தியை வழங்கும்.
அடிக்கல் நாட்டும் விழாவுக்குப் பிறகு, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி உலர் உணவு பொதிகள் மற்றும் எழுதுபொருட்களை வீட்டு பயனாளிகளின் பிள்ளைகளுக்கு விநியோகித்தார்.
51 படைப்பிரிவின் தளபதி , 511, 512 மற்றும் 513 பிரிகேட்களின் தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள், பிரதேச செயலாளர் – சங்கானை, தேசிய வீட்டுவசதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய முகாமையாளர், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை தலைமையக படையினர் ஆகியோரும் கலந்து கொண்டனர். bridge media | NIKE HOMME