10th October 2023 13:55:35 Hours
74 வது இராணுவ ஆண்டு நிறைவு தினத்துடன் (ஒக்டோபர் 10), நிலை உயர்வு பெற்ற ஏழு இராணுவ மேஜர் ஜெனரல்கள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களைச் சந்தித்து திங்கட்கிழமை பிற்பகல் (09 ஒக்டோபர்) தமது அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துக்களையும் தளபதி அலுவலகத்தில் பெற்றுக்கொண்டனர்.
மேஜர் ஜெனரல் ஆர் எல்விட்டிகல யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம், மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ ஆகியோர் நாட்டின் பாதுகாப்பு, செழுமை மற்றும் நலனுக்காக தமது அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகளுக்கு வரும் ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட உறுதியளித்ததுடன், இராணுவத் தளபதி அவர்களை வாழ்த்தி அவர்களின் அதிகாரச் சின்னங்களை வழங்கினார்.
சுமுகமான உரையாடல் மற்றும் வாழ்த்துக்களுடன் இராணுவத் தளபதி புதிய இரு நட்சத்திர ஜெனரல்களுக்கு அவர்களின் புதிய அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் ஜெனரலின் வாளை வழங்கினார். இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த அந்த அதிகாரிகள், நிகழ்வின் நினைவாக படங்களும் எடுத்துக்கொண்டனர்.