Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th September 2021 12:00:02 Hours

ஏட்டம்பகஸ்கடையில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட புதிய மணிக் கோபுரம் திறப்பு

ஏட்டம்பகஸ்கட விகாரையின் தலைமை விகாராதிபதி வண. கல்யாண திஸ்ஸாபிதான தேரரின் அழைப்பை ஏற்று ஏட்டம்பகஸ்கட கிரிவெஹெரகம ஸ்ரீ தந்ததாது ராஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்தின் திறப்பு விழா நிகழ்விற்கு வியாழக்கிழமை (9) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன் நிர்மாண பணிகளுக்காக இராணுவத்தினரின் உதவிகள் கோரப்பட்டிருந்த நிலையில் 7 மற்றும் 21 வது சிங்கப் படையிணியின் படையினரால் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் யூ.யூ.கே.எல்.எஸ்.பெரேரா, 563 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.பீ.ஏ பெரேரா, 563 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் எம்.ஏ.சீ.பி.மாரசிங்க மற்றும் 21 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்.பி.எஸ்.கே. நில்மாலகொட, 7 வது இலங்கை சிங்கப்படையின் கட்டளை அதிகாரி மேஜர் எம்.ஏ.ஜே.எம்.பெரேரா ஆகியோர் மணிக் கோபுர திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.