04th September 2020 09:15:38 Hours
எட்டம்பகஸ்கடவில் உயிர் நீத்த முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களை நினைவு கூறும் வகையில் தானம் வழங்கும் நிகழ்வானது எட்டம்பகஸ்கடவிலுள்ள ஶ்ரீ சுதர்ஷனராமய மஹா விகாரையில் கடந்த ஆகஸ்ட் மாதம் (29) ஆம் திகதி பௌத்த தேரர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது வடமாகாணத்தின் தவிசாளரும், பிரதான விகாராதிபதியான தேச கீர்த்தி எட்டம்பகஸ்கட ஶ்ரீ கல்யாணதிஸ்ஸபிஹிதான அவர்களது தலைமையில் இடம் பெற்றன.
இப்பிரதேசத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களை நினைவு கூறும் முகமாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க, 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரே, 563 படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் , பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களது பங்களிப்புடன் இந்த தான நிகழ்வுகள் இடம்பெற்றன.
மே மாதம் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் எல்டிடிஈ பயங்கரவாத தாக்குதலினால் வன்னி பொதுமக்கள் பலிக்குள்ளாகினர். அத்துடன் அப்பகுதிகளிலுள்ள பொது மக்களை தங்களது பாரம்பரிய வதிவிடங்களிலிருந்து அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பயங்கரவாதியினர் ஈழம் எனும் பெயரில் எட்டம்பகஸ்கட, கெப்பிடிகொலாவ, வெலிஓயா பகுதிகளிலுள்ள பொது மக்களை மிகவும் கஸ்ட்டத்திற்கு உள்ளாக்கினர். Sports Shoes | Nike Off-White