Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd September 2021 19:37:24 Hours

எகிப்திய தூதுவர் இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான எகிப்து அரபிய குடியரசின் தூதுவர் மேதகு ஹுசேன் எல் சஹர்தி இன்று (23) கொவிட் -19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்

இராணுவத் தலைமையகத்தின் உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹிரோஷ வனிகசேகர அவர்களால் தலைமையக நுழைவாயிலில் வரவேற்றுகப்பட்ட தூதவர் இராணுவத் தளபதி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அன்பான வரவேற்பைத் தொடர்ந்து எகிப்திய தூதருடன் இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் நீண்டகால உறவுகளை புரிந்து கொள்ளவும் பலப்படுத்துவதற்கான முக்கியத்துவம் குறித்தும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் எகிப்திய தூதரும் சுமுகமாக கலந்துரையாடினர்.

வருகை தந்த தூதுவர் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு தொடர்பான உறவுகளை வலுப்படுத்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார், அதற்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கை இராணுவத் தளபதி இரு நாடுகளும் பல நூற்றாண்டுகளாக கொண்டிருந்த வரலாற்று உறவுகளை நினைவு கூர்ந்தார்.

இரு நாடுகளுக்கிடையான இராணுவப் பயிற்சித் திட்டங்கள் உட்பட பாதுகாப்பு பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்துவது சம்பந்தமாக கலந்துரையாடினார்கள். பின்பு எகிப்திய தூதுவர் ஹுசைன் எல் சஹார்தியின் எதிர்கால முயற்சிகள் தொடர வாழ்த்துக்களை தெரிவித்தார்.

எகிப்திய தூதுவர் புறப்படுவதற்கு முன்னர், கொவிட் -19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரான ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் எகிப்திய தூதுவர் ஹுசேன் எல் சஹர்தி இலங்கையின் கொவிட் -19 சம்பந்தமாக விசாரித்தார். இதன் பின் அவர் இராணுவத் தளபதி அலுவலகத்தின் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டார். இச் சந்திப்பு கொவிட் -19 பரவுவல் தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நடைபெற்றது