Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2021 12:58:00 Hours

ஊனமுற்ற போர் வீரர்கள் மற்றும் படையணி செஸ் வீரர்கள் செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் பிரகாசிப்பு

இலங்கை இராணுவத்தின் ஊனமுற்ற போர் வீரர்களுக்கான செஸ் சம்பியன்ஷிப் போட்டி மற்றும் படையணிகளுக்கிடையிலான செஸ் சம்பியன்ஷிப் போட்டிகளின் பரிசு வழங்கும் நிகழ்வானது வியாழக்கிழமை (25) பனாகொட இராணுவ உள்ளக உடற்பயிற்சி கூடத்தில் இடம்பெற்றது.

இராணுவ செஸ் கழகத்தின் தலைவரும் இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியும் புத்தல அதிகாரிகள் தெழிலாண்மை மேப்பாட்டு மையத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுவர்ண பொத்தோட்ட அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவத் தளபதியை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.

ஊனமுற்ற போர்வீரர்களை ஊக்குவிக்கும் செஸ் சம்பியன்ஷிப் போட்டியானது மாற்றுத் திறனாளி போர்வீரர்களின் பங்குபற்றுதலுடன் நவம்பர் 18 - 19 ஆம் திகதிகளில் பங்கொல்ல 3 வது அபிமன்சல ' வளாகத்தில் இடம்பெற்றது. அதேவேளையில் படையணிகளிடையேயான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் 17 படையணிகளின் செஸ் வீரர்கள் நவம்பர் 22 ம் 23 ம் திகதிகளில் பனாங்கொட இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இராணுவ செஸ் கழக தலைவரால் வழங்கப்பட்ட வரவேற்பிற்குப் பின்னர் அன்றைய பிரதம அதிதி சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளைக் கண்டுகளிக்க வருகை தந்தார்.

இறுதிப் போட்டியின் பின்னர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்க மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட அழைக்கப்பட்டார். போட்டிக்கான வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதை அடுத்து, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா மற்றும் பொது பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டுக்கான படையணி செஸ் சாம்பியன்ஷிப்பை இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் வீரர்கள் பெற்றுள்ளனர். 2 ஆம் மற்றும் 3 ஆம் இடங்களை முறையே இலங்கை இலேசாயுத காலாட் படையணி வீரர்களும், இலங்கை இராணுவ சேவைப் படையணியின் வீரர்களும் பெற்றனர்.

இதற்கிடையில், ஊனமுற்ற போர் வீரர்களின் செஸ் சம்பியன்ஷிப் 3 வது அபிமன்சலவில் நடைப்பெற்றன, அதே நேரத்தில் அவர்கள் அன்றைய பிரதம அதிதியிடமிருந்து வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் விருதுகளையும் பெற்றனர்.

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றிய இந் நிகழ்வு இடம் பெற்றதுடன் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட இந் நிகழ்வில் பங்கேற்ற வீரர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த போட்டியில் ராகம ரணவிரு செவன, அத்திட்டிய மிஹிந்து செத் மெதுர, அபிமன்சல 1, 2, 3 அனுராதபுரம், கம்புருபிட்டிய மற்றும் பாங்கொல்ல புனர்வாழ்வில் பார்வையற்ற மற்றும் ஊனமுற்ற போர்வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விருது வழங்கல் நிகழ்வின் முடிவில், அன்றைய பிரதம அதிதி இரண்டு போட்டிகளிலும் சாதனை படைத்தவர்களை வாழ்த்தியதுடன், விருதுகள் மற்றும் பாராட்டுகளைப் பெறுவதற்கு தேசிய மட்டத்தை அடைய அவர்களின் திறமைகளை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுற்றிகாட்டினார்.

அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதங்கள் இசைக்கப்பட்டதுடன், உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் அன்றைய நிகழ்வு ஆரம்பமானது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த நிகழ்வில் இராணுவ செஸ் கழகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தோட்ட வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் இந் நிகழ்வில் குழு புகைப்படம் எடுத்தல் மற்றும் நன்றியுரையும் இடம்பெற்றது.

சிரேஷ்ட அதிகாரிகள், நிலையத் தளபதிகள், அதிகாரிகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சிப்பாய்களும் இந் நிகழ்வை கண்டுகளித்தனர்.