11th December 2021 00:33:55 Hours
விடைபெற்றுச்செல்லும் இலங்கையின் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டேவிட் அல்பிரட் அஷ்மன் மற்றும் அப்பதவிக்கு நியமனம்பெற்று வரும் ஆலோசகர் கேணல் பி.ஜே. திரு. கிளேட்டன் ஆகிய இருவரும் இன்று (09) காலை பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
வெளியேறும் பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர், தனது பதவிக்காலத்தில் பேணப்பட்ட சுமூகமான பணிகள் மற்றும் உறவுகளை நினைவுகூர்ந்ததோடு, தளபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இராணுவத் தளபதிக்கு தனது நன்றியைத் கூறிக்கொண்டனர்.
அதே நேரத்தில், அவர் தனது பதவி வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள கேணல் பீஜே கிளேட்டன் அவர்களை தளபதிக்கு அறிமுகம் செய்து வைத்தார். தனக்கும் வழங்கிய அதே ஆதரவை எதிர்காலத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகருக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதேநேரம் ஜெனரல் ஷவேந்திர சில்வா, வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகரின் இருதரப்பு ஒத்துழைப்புக்கான பணிகள் மற்றும் புரிந்துணர்வுகளை பாராட்டினார்.
இச் சந்திப்பின் நிறைவம்சமாக, ஜெனரல் ஷவேந்திர சில்வா பதவி விலகும் உயர்ஸ்தானிகராலய அதிகாரிக்கு விசேட நினைவுச் சின்னத்தை வழங்கி, அவரது எதிர்கால பணிகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.