Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th August 2020 16:25:29 Hours

உள்ளக பாதுகாப்பு அமைச்சில் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின் பதவியேற்பு நிகழ்வு

மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் தனது பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு மேலதிகமாக, உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சியின் செயலாளராக தனது கடமையை இன்று காலை 26 ஆம் திகதி நாரஹேன்பிட்டயில் உள்ள புதிய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அத்துடன் பெளத்த பிக்குகளின் 'செத் பிரித்' பூஜைகளுக்கு மத்தியில் புதிய செயலாளர் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தையிட்டு பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு சமல் ராஜபக்ஷ, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு சரத் வீரசேகர, பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டின்ன் ஜெனரல் ஷவேந்திர சில்வா ,விமானப்படை தளபதி , பதில் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு படையின் தலைவர், தேசிய மாணவர் சிப்பாய் படையணித் தலைவர், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தலைவி திருமதி சித்ராணி குணரத்ன , இராணுவ சேவா வனிதா பிரிவு தலைவி திருமதி சுஜீவ நெல்சன், சில சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அமைச்சின் ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் ஊடக அதிகாரிகளுடன் உரையாடினார்.

இராணுவ சேவா வனிதா பிரிவு தலைவி திருமதி சுஜீவ நெல்சன் அவர்கள் அவர்களினால் பாதுகாப்பு செயலாளருக்கு இவ்வைபவத்தில் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. latest jordans | UOMO, SCARPE