21st April 2020 22:25:22 Hours
பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியும் மற்றும் கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் காணொளி பதிவானது இன்று 21 ஆம் திகதி மாலை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
“இராணுவத்தினால் மற்றும் கடற்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து பிசிஆர் பரிசோதனைகளின் பின்னர் இன்று 21 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட 149 இற்கும் அதிகமான நபர்கள் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரையில் 4348 பேர் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்பொழுது, 1582 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம், நாங்கள் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஏற்கனவே கோவிட்-19 தொற்றுக்குள்ளான ஒரு பெண்னுடன் நெருங்கி பழகியவர்கள்,கும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களான 242 இற்கும் அதிகமான நபர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பியுள்ளோம். ஆதேவேளை, அதே பிரதேசத்தில் இருந்து 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 நபர்களை இராணுவத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் மூன்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பியுள்ளோம்.
பாகிஸ்தானில் பயிற்சி பாடங்களில் கலந்து கொண்ட 82 இராணுவம்,கடற் படை மற்றும் விமானப் படை உட்பட 106 நபர்கள் 21 ஆம் திகதி மாலை லாஹூர் விமான நிலையத்தில் இருந்து யுஎல் 1206 விமானத்தின் மூலம் நாடு திரும்புவர் என திர்பார்க்கப்படுகின்றது. அவர்களின் பயிற்சிக் காலம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் பாகிஸ்தானில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக தாமதித்து வைக்கப் பட்டுள்ளனர். குறித்த 106 பேரில் 24 பேர் இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு உயர் கல்வியை தொடர்வதற்காக சென்றவர்கள். அவர்கள் நாடு திரும்பியவுடன் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இன்று பிலியந்தல மற்றும் பொரலஸ்கமுவை பிதேசத்தில் இருந்து இனங்காணப்பட்ட இரண்டு கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர். அதன்படி, குறித்த பொரலஸ்கமுவை பிரதேசத்தை சேரந்த நோயாளர் மருந்தினை பெற்றுக் கொண்ட தனியார் மருத்துவ நிலையத்தின் தாதி ஊளியர்கள் குறித்த தனியார் மருத்துவ நிலையத்தினை மூடிய பின்னர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதேபோல், பிலயந்தலை நோயாளியுடன் தொடர்புடைய அனைவருக்குமான தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
முழுமையான காணொளி பின்வருமாறு affiliate link trace | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival