Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th August 2021 08:54:37 Hours

உமிரி உவர்நீர் பகுதியை சுற்றி படையினரால் 200 கண்டல் தாவரங்கள் நாட்டிவைப்பு

கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தையொட்டி , 242 வது பிரிகேடின் கீழ் உள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் 8 வது பட்டாலியன் படையினரால் அம்பாறையில் உள்ள உமிரி உவர்நீர் பகுதியை சுற்றி 200 கண்டல் தாவரங்கள் நடும் திட்டம் திங்கட்கிழமை (26) ஆரம்பிக்கப்பட்டது.

வனப் பாதுகாப்பு தினைக்களத்தின் பிரதேச வன அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் 8 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரின் பங்குபற்றலில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வனப் பாதுகாப்பாளர் நாயகம், அம்பாறை மாவட்ட செயலாளர், 242 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, அரச அதிகாரிகள் மற்றும் வன திணைக்கள அதிகாரிகள் பங்கேற்றனர்.