Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2022 13:18:52 Hours

'உமாண்தவ' தேரர் உதவியுடன் இராணுவத்தினால் முல்லைத்தீவில் தொண்டுப் பணிகள்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க மற்றும் 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 57 வது படைப்பிரிவின் படையினர் வெள்ளிக்கிழமை (30) பிறமந்தன் ஆறு வித்தியாலயம், நெத்தலி ஆறு வித்தியாலயம், புன்ன நிரவி வித்தியாலயம் மற்றும் விஸ்வமடு மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெருமளவான பாடசாலை உபகரணங்கள், ஊக்கத்தொகைகள் மற்றும் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

14 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி மற்றும் 6 வது இலங்கை சிங்க படையணி ஆகியவற்றின் பங்களிப்பு மற்றும் ஏற்பாட்டில் குருநாகல் 'உமாண்தவ' விகாரையின் தலைமை பீடாதிபதி வண. சமந்த பத்ர தேரரின் அனுசரணையுடன் இந்த தொண்டு நிகழ்வு இடம்பெற்றது.

மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வண. சமந்தர பத்ர தேரர் அவர்கள் 2022 செப்டெம்பர் 29 ஆம் திகதி மூல தீப விஹாரையில் சமூகத்தின் வாழ்க்கைத் தரம் குறித்து ஒரு பிரசாரத்தை நிகழ்த்தினார். அத்துடன் 75 உலர் உணவுப் பொதிகள் பிரதேசத்தின் வரிய சமூகத்தினருக்கு விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொதுப் பணி பிரிகேடியர் வசந்த பாலமகும்புர, 571 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கம்லத், 572 வது பிரிகேட் தளபதி கேணல் கமால் அமரசிங்க, 573 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சம்பத் பிரசன்ன, 6 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, தருமபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், விஸ்வமடு மகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.