Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th September 2022 20:02:25 Hours

உபகரண மாஸ்டர் ஜெனரல் & போர் கருவி பணிப்பாளர் நாயகம் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம், வைத்தியசாலை & படைப்பிரிவுக்கான பரீட்சாத்த விஜயம்

உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஆர்ஏடிபி ரணவக்க மற்றும் போர் கருவி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹிரோஷ் வணிகசேகர ஆகியோர் இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொறுப்பின் கீழ் உள்ள பல பிரதேசங்களுக்கு திங்கட்கிழமை (5) தங்களது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டனர். இந்த விஜயமானது யாழ் குடாநாட்டில் சேவையாற்றும் படை வீரர்களின் நிர்வாகம் மற்றும் விடுதி தொடர்பான பல வியடங்களை தெளிவுபடுத்தும் முகமாக அமைந்திருந்தது.

மேலும் இவ் விஜயத்தில் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் பணிப்புரைக்கமைய, வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஏ.சி.ஏ. டி சொய்சா மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் எம் பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் முதலில் பலாலி இராணுவ ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், வைத்தியசாலை வளாகம், அதன் சமையலறை மற்றும் சத்திரசிகிச்சை பிரிவு ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தையும் பார்வையிட்டனர். பின்னர், 522 வது பிரிகேட் தலைமையகம், 15 வது (தொண்டர்) கஜபா படையணி மற்றும் படையினரின் தங்குமிடம், களஞ்சியசாலை, உணவகசாலை,ைமற்றும் சமையலைறை செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

பின்னர், 52 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு இரு சிரேஷ்ட அதிகாரிகளும் விஜயத்தை மேற்கொண்டதுடன் அங்கு அவர்களுக்கு படையினரால் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது். வருகை தந்த உபகரண மாஸ்டர் ஜெனரல் மற்றும் போர் கருவி பணிப்பாளர் நாயகம் ஆகிய இருவரும் இணைந்து 52 வது படைப் பிரிவின் கேட்போர் கூடத்தில் உபகரணங்கள் தொடர்பான விரிவான கருத்துக்களை வழங்கினர். இந்த நிகழ்வில் வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதி ,அனைத்து படைத் பிரிவின் தளபதிகள், பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், கேர்னல் நிர்வாக அதிகாரிகள் மற்றும் படைத் தலைமையகத்தின் படையினர் பலர் கலந்து கொண்டனர்.