Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th June 2021 18:00:38 Hours

"உண்மையுள்ள கொமாண்டோவாக உங்களுடை அனுபவங்களை வளர்ந்துவரும் இராணுவ அதிகாரிகள் பெற்றுக்கொள்ள வேண்டும்" - ஓய்வுபெற்ற சிரேஸ்ட கொமாண்டோவிடம் இராணுவ தளபதி தெரிவிப்பு

"பல முன்னாள் தளபதிகளின் கீழ் இராணுவத்தில் முக்கிய மற்றும் வீரம் மிக்க கொமாண்டோக்களில் ஒருவராக அமைதிக்கான போரின் போது உச்சக்கட்ட உங்களால் முடிந்ததை வழங்கிய அதிஷ்டசாலி அதிகாரிகளில் ஒருவராக நீங்கள் இன்று இராணுவத்திலிருந்து வெளியேறுகிறீர்கள். உங்கள் தோழர்கள் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை தியாகம் செய்திருந்தாலும் இரக்கமற்ற எல்.ரீ.ரீ.ஈ அமைப்புடனான வன்முறையின் போது, நீங்கள் காயமின்றி தப்பிய ஒரு சில அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவர். கட்டளை அதிகாரிகளில் ஒருவராக இருந்தீர்கள். ஆகவே, உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் பாத்திரங்கள் நிச்சயமாக வளர்ந்து வரும் அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாகவும், உத்வேகம் அளிப்பதாக அமையும் "என்று பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வுபெற்றுச் செல்லும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்‌ஷ அவர்களிடம் தெரிவித்தார்.

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் தினமான இன்று (21) மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்‌ஷ அவர்களுக்கு இராணுவ தலைமையகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், அங்கு தளபதியின் அலுவலகத்துக்கு அழைப்பிக்கப்பட்டு ஒழுக்கமான மற்றும் முன்மாதிரியான அவரது சேவைக்காகவும், இராணுவத்தின் உண்மையுள்ள இராணுவ வீரராக 3 தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலங்களாக பணியாற்றிய அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இராணுவத்தில் பல முக்கிய நியமனங்கள் மற்றும் கொமாண்டோ படையணி ஆகியவற்றில் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ, குறிப்பாக பல முன்னாள் இராணுவத் தளபதிகளின் கீழ் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். "உங்கள் சொந்த அர்ப்பணிப்பு கடின உழைப்பு, உண்மையான போர்வீரர் அர்ப்பணிப்பு மற்றும் முன்னுதாரணமான நடத்தை ஆகியவற்றின் மூலம் நீங்கள் இரண்டு நட்சத்திர மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்தீர்கள், அதே நேரத்தில் நீங்கள் எங்கு பணியாற்றினாலும், முன்பு சேவையாற்றிய இடங்களிலிருந்து காலாட் படை வீரர்களின் துயரங்களைக் கேட்கும் ஒரு கனிவான அதிகாரியாக இருந்துள்ளீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் ஓய்வு பெற்ற பின்னரும் கூட உங்களது முன்னேற்றகரமான எண்ணக்கருக்கள், முன்னோக்குகள், அனுபவங்கள் மற்றும் நோக்க கொள்கை பரிந்துரைகளை இராணுவத்ததுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதனையடுத்து ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதியின் கோரிக்கைக்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, உண்மையான அர்ப்பணிப்புடன் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் ஒரு முன்மாதிரியான இராணுவத் தளபதி தனது வாழ்க்கைக்கு எடுத்துகாட்டாக இருந்ததையும் நினைவுகூர்ந்தார். உரையாடலின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெற்றவருக்கு பாராட்டு மற்றும் சிறப்பு நினைவு பரிசு வழங்கினார்.

மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ 1987 ஆம் ஆண்டில் இராணுவத்தில் இணைந்து, நேரடியாக கொமாண்டோ படையணியில் சேர்ந்தார் 'ஜெயா சிக்குரு', 'அகுனு பஹார' உட்பட கிட்டத்தட்ட அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்கும் பங்களிப்பு செய்த்தோடு முஹமாலை, கட்டபரிச்சான், வில்பத்து காடுகளில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் பஙகளிப்பு செய்தார். ஒரு உறுதியான அதிகாரியாக, அவர் பல துணிச்சலான மீட்புப் பணிகள், பணயக்கைதிகளை விடுவித்தல், கட்டுக்கடங்காத கும்பல்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் முன்நின்று செயற்பட்டவர்.

அத்தோடு அவர் இராணுவ தலைமையகத்தில் நடவடிக்கை பணிப்பாளராகவும் பணியாற்றினார். மேலும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட ஞாயிற்றுக்கிழமையன்று, கொழும்பிலும் பிற பகுதிகளிலும் இருக்கின்ற கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் முழுமையான பாதுகாப்புகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். மேலும் 68 வது படைப்பிரிவு பிரதி தளபதியாகவும், , கொமாண்டோ படையணியித் தலைமையகத்தின் தளபதி, மின்னேரியா காலாட்படை பயிற்சி மத்தியஸ்தானத்தின் பிரதி தளபதி, 541 வது பிரிகேட் தளபதி மற்றும் 623 வது பிரிகேட் தளபதி ஆகிய பதவிகளை வகித்ததோடு, 2020 ஜனவரி 17 ஆம் திகதி கொமாண்டோ படையணியின் படைத் தளபதியாகவும் 2021 பெப்ரவரி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.