Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th October 2021 15:30:04 Hours

"உங்கள் தியாகங்களுக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" இராணுவ தளபதி அனுராதபுரம் அபிமன்சாலாவில் உள்ள போர் வீரர்களுடன் கலந்துரையாடல்

ஜய ஸ்ரீ மகா போதியவில் இடம்பெற்ற இராணுவ கொடிகளுக்கு ஆசிர்வாதம் பெறும் நிகழ்வின் பின்னர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அவருடைய பாரியார் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களுடன் இணைந்து அனுராதபுரத்திலுள்ள அபிமன்சல புனர்வாழ்வு நிலையம் – 1 (வெல்னஸ் ரிசோர்ட்) இலுள்ள ஊனமுற்ற போர் வீரர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதன்போது ஜெனரல் சவேந்திர சில்வா, திருமதி சுஜீவா நெல்சன் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் மேற்படி புனர்வாழ்வு நிலையத்தில் வாழும் அங்கவீனமுற்ற வீரர்களுடன் கலந்துரையாடினர். அத்தோடு போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பிலும் இராணுவத்தின் சிப்பாயகவிருந்து நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக போர்வீரர்கள் செய்த சேவைகளை பாராட்டி அவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைத்தனர்.

அதன்போது அங்கு சிகிச்சைப் பெறும் வீரர் ஒருவர் தனது கலை திறமையால் வடிவமைத்த மரத்தாலான படைப்பை தளபதியிடம் வழங்கினார்.

பின்னர் ஒரு தந்தையின் நிலையில் இருந்து பாசத்தைக் காட்டி அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார். அவர் புறப்படுவதற்கு முன்பு விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார். இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சேவை வனிதையர் பிரிவு தலைவி ஆகியோருக்கு அபிமன்சல நிலையத்தின் தளபதி விசேஷ நினைவுப் பரிசுகளை வழங்கினார். அங்கு அனைத்து வாழும் போர் வீரர்களை மகிழ்விக்கும் பொருட்டு குழு புகைப்படமும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

'தைரியமான இதயங்கள்' திட்டத்தின் கீழ் அனுராதபுரத்தின் தாமரையால் அலகு பெறும் நுவர குளத்திற்கு அருகாமையில் 5 ஏக்கர் அழகிய நிலப்பரப்பில் அமைந்துள்ள 'அபிமன்சல -1' முற்றிலும் இளமைப் பருவத்தில் ஊனமுற்ற போர்வீரர்களைக் கொண்டுள்ளது. ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் பேசுவது அவர்களுக்கு இராணுவத்தையும், நாட்டின் நன்றியுள்ள மக்களையும் நினைவூட்டுகிறது, ஏனெனில் அவர்களின் தியாகங்கள் கவனிக்கப்படாமல் போகவில்லை, எப்போதும் நன்றியுடன் இருக்க வேண்டும். அப்போது ஜனாதிபதியாக இருந்த மாண்புமிகு பிரதமர் மற்றும் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவுடன், அரச நில ஒதுக்கீட்டுடன் அபிமான்சல அக்கால இராணுவ தளபதியின் ஆதரவுடன் நிஜமானது.

இராணுவ பதவிநிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, பிரதி இராணுவ பதவிநிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட, தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் பல சேவை வனிதையர் இந்த விஜயத்துடன் இணைந்திருந்தனர்.