Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th August 2021 17:37:23 Hours

ஈட்டி எறிதலில் இலங்கை இராணுவ பொலிஸ் பரா ஒலிம்பியன் வெண்கலப் பதக்கம் வென்றார்

டோக்கியோவில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகள் 2020 இல் திங்களன்று (30) இலங்கை முதல் தங்கப் பதக்கத்தை வென்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு ஈட்டி எறிதல் எப் 64 போட்டியில் இலங்கை இராணுவ இராணுவப் பொலிஸ் படையின் கோர்ப்ரல் துலன் கொடித்துவக்கு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இரண்டாவது இலங்கை பாராலிம்பியனின் வெற்றிக்கு பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவரை தொலைபேசியில் வாழ்த்தினார்.

வெண்கலப் பதக்கம் வென்ற கோப்ரல் துலான் கொடித்துவக்கு இந்தோனேசியாவில் நடைப்பெற்ற 2018 ஆசிய பரா போட்டிகள், துபாயில் நடைப்பெற்ற உலக பரா போட்டிகள் 2019 மற்றும் தேசிய பரா போட்டிகளில் பங்கேற்றவர்.

2009 டிசம்பர் மாதம் 5 ம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்துக் கொண்ட அவர் தெனியாயாவை பூர்வீகமாகக் கொண்டவர்.