Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd February 2023 19:24:08 Hours

இளம் தலைமைத்துவம் மற்றும் தொழின்முறை மேம்பாட்டு பயிற்சி பாடநெறி இல 47 நிறைவு

இளம் தலைமைத்துவம் மற்றும் தொழின்முறை மேம்பாட்டு பயிற்சி பாடநெறி இல 42 ன் சான்றிதழ் வழங்கும் விழா பெப்ரவரி 21 அன்று அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் போர் பயிற்சிப் பாடசாலை கட்டளை அதிகாரி கேணல் கமல் டி சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

100 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் 3 மாத காலப் பாடநெறியைப் பயின்றதுடன் 1 வது கமாண்டோ படையணியின் கோப்ரல் எச்.எம்.எம்.பீ ஹேரத் பாடநெறியின் சிறந்த மாணவராக விருது பெற்றார்.

தலைமைப் பண்புகளை மேம்படுத்துவதும், அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதும் இப் பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.