Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இலேசாயுத காலாட் படையணி தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் சம்பியன்

தேசிய பரா மெய்வல்லுனர் 2019 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் இம் மாதம் 5 – 6 ஆம் திகதிகளில் சுகததாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

தேசிய பாரா சங்கத்தின் (NPC) சாம்பியன்ஷிப்பிற்காக 190 தடகள மற்றும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதில் விஷேட தேவையுடைய நபர்களுக்கான மூன்று குழுக்களும், பார்வைக் குறைபாடுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள், உடல் மனநல சிக்கல்களை கொண்ட நபர்களுக்கு இந்த போட்டியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த போட்டிகளில் 45 விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த 800 போட்டியாளர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சம்பியனாகவும், கொழும்பு ரிஹேப் லங்கா விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த மகளிர் அணியில் சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விஜயபாகு காலாட் படையணி இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது.

இந்த இறுதி நாள் நிகழ்விற்கு பிரதம அதிதியாக போக்குவரத்து அமைச்சர் திரு. அர்ஜூன ரனதுங்க அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த நுவன் இந்திக மற்றும் கொமாண்டோ படையணியைச் சேர்ந்த புத்திக இந்திரபால அவர்கள் சிறந்த சிரேஷ்ட விளையாட்டு வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். best Running shoes | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE