Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th February 2019 12:55:57 Hours

இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் நுழைவாயிலில் புதிய கதவு திறந்து வைப்பு

தெல்ஹொடயில் அமைந்துள்ள 8 ஆவது இலேசாயுத காலாட்படையணி தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் புதிய கதவு இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்களினால் இம் மாதம் (22) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

8 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் அநுர நாணாயக்காரா அவர்களினால் படைத் தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய படைத் தளபதி விஜயத்தை மேற்கொண்டு இந்த புதிய கதவினை திறந்து வைத்தார்.

அத்துடன் படைத் தளபதியினால் முகாம் வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது. இச்சந்தர்ப்பத்தில் இலேசாயுத காலாட் படையணியின் பிரதி கட்டளை தளபதி கேர்ணல் டீ.ஏ.கே திசாநாயக மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Nike air jordan Sneakers | GOLF NIKE SHOES