08th March 2024 12:15:29 Hours
இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை ஒட்டி இலங்கை விமானப்படை ஏற்பாடு செய்த 25வது இலங்கை விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் சிறப்பான திறன்களை வெளிப்படுத்தினர்.
ஆண்களுக்கான சவாரி 03 மார்ச் 2024 அன்று காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டு 05 கட்டங்கலாக 654 கி.மீ தூரம் கொண்டதாக 07 மார்ச் 2024 அன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. பெண்களுக்கான சவாரி 07 மார்ச் 2024 அன்று மாங்குளத்தில் ஆரம்பிக்கப்பட்டு அதே நாளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.
இராணுவ சைக்கிள் ஓட்டுநர் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் ஜே.ஏ.ஆர்.எஸ்.கே ஜயசேகர (ஓய்வு) யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல்களின்படி, 10 ஆண் மற்றும் 05 பெண் இராணுவ சைக்கிள் ஓட்டுநர்கள் இந்த சவாரியில் பங்கேற்று இராணுவத்திற்கு பெருமை சேர்த்தனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர்.
இராணுவத்தின் சிறப்பு திறன்கள் பின்வருமாறு
1 ஆம் இடம் ஆண்கள் குழு நிகழ்வு - இலங்கை இராணுவம் (சிறந்த நேரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது)
லான்ஸ் கோப்ரல் எஸ்.எம்.என்.பீ திசேரா இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
லான்ஸ் கோப்ரல் எச்.டபிள்யூ.எம் சண்தருவான் பிந்து இலங்கை சிங்க படையணி
சிப்பாய் ஏடிஎஸ் பெரேரா இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
1 ஆம் இடம் ஆண்களுக்கான சிறந்த ஸ்பிரிண்டர் நிகழ்வு- லான்ஸ் கோப்ரல் எஸ்.எம்.என்.பீ திசேரா இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
3 ஆம் இடம் ஆண்கள் கிங் மவுண்டன் நிகழ்வு - லான்ஸ் கோப்ரல் டபிள்யூடிபீஎஸ் வீரசிங்க இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
4 ஆம் இடம் ஆண்கள் கிங் மவுண்டன் நிகழ்வு - கோப்ரல் ஆர்.டி.சி. தயானந்தன இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
8 ஆம் இடம் ஆண்கள் கிங் மவுண்டன் நிகழ்வு - சிப்பாய் ஏடிஎஸ் பெரேரா இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
1 ஆம் இடம் ஆண்கள் சவாரி - லான்ஸ் கோப்ரல் டபிள்யூடிபீஎஸ் வீரசிங்க இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
5 ஆம் இடம் ஆண்கள் சவாரி – சிப்பாய் டப்ளியூஏஏ ருக்மல் இலங்கை பீரங்கி படையணி
3 ஆம் இடம் பெண்கள் சவாரி - லான்ஸ் கோப்ரல் டபிள்யூஆர்எம் பெர்னாண்டோ இலங்கை இராணுவ மகளிர் படையணி
7 ஆம் இடம் பெண்கள் சவாரி – கோப்ரல் யூஎன் குமாரசிங்க இலங்கை இராணுவ மகளிர் படையணி
9 ஆம் இடம் பெண்கள் சவாரி - லான்ஸ் கோப்ரல் என்டி விஜேசிங்க இலங்கை இராணுவ மகளிர் படையணி