03rd March 2023 17:50:08 Hours
திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் 2023 ஜனவரி 09 முதல் பெப்ரவரி 08 வரை இராணுவ வீரர்களுக்கான அவுட்போர்டு மோட்டார் பாடத்திட்டத்தை நடாத்திய போது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 20 தொழிநுட்ப படையினர் கடற்படையினரால் வழங்கப்பட்ட சகோதர பயிற்சி ஆதரவை அனுபவித்தனர்.
பல்வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் இராணுவ படகுகளின் இயந்திரங்களை பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றை திறமையாக அறிந்து கொள்வதற்காக படையினருக்கு பயிற்சியளிக்கும் பாடநெறியானது இலங்கை இராணுவத்தின் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் ஜெயசேகரவினால் ஆரம்பிக்கப்பட்டது.
படகு என்ஜின் பழுதுபார்தல் மற்றும் பராமரிப்பு பாடநெறி பாடத்திட்டமானது எஞ்சின் கூறுகளை அடையாளம் காணுதல், இயந்திர பராமரிப்பு மற்றும் சரிசெய்தல் நுட்பங்கள் போன்ற பல தலைப்புகளை உள்ளடக்கியது. இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படையினர்கள் புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்ட பல்வேறு வகையான படகு இயந்திரங்களில் நடைமுறைப் பயிற்சிகள் மூலம் பயிற்சி பெற்றனர்.
சகோதர சேவை பணியாளர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கான கடற்படையின் உறுதிப்பாட்டிற்கு இணங்க இந்த பாடநெறி நடத்தப்பட்டது.
படகு என்ஜின் பழுதுபார்தல் மற்றும் பராமரிப்பு பாடநெறியில் கலந்து கொண்டவர்களுக்கான தனி சான்றிதழ் வழங்கும் விழா இராணுவ தலைமையகத்தில் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் ஜயசேகர, இலங்கை கடற்படையின் பிரதிநிதியாக லெப்டினன் கமாண்டர் சிந்தக விஜேசிங்க, பணிநிலை அதிகாரிகள் பொறியியல் பயிற்சி அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பலர் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.