21st November 2023 20:55:54 Hours
இராணுவத் தலைமையகத்தின் முகாமைத்துவ மற்றும் பராமரிப்பின் பணிப்பாளர் பிரிகேடியர் ஓ.எம்.டி குணசிங்க அவர்கள் தனது சேவையின் இறுதி நாளான 2023 நவம்பர் மாதம் 17 இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரிகளின் பிரியாவிடையை பெற்றுக்கொண்டார்.
இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைவாக பிரிகேடியர் ஓ.எம்.டி.குணசிங்க அவர்களை நிலைய தளபதி பிரிகேடியர் சி.களுத்தரஆராச்சி அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், அவருக்கு நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் அவருக்கு அணிவகுப்பு மரியாதையை வழங்கப்பட்டதை தொடர்ந்து, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடன், பிரிகேடியர் ஓ.எம்.டி.குணசிங்க இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தின் அதிகாரிகள் உணவகத்தில் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.
ஓய்வுபெறும் பிரிகேடியர் ஓ.எம்.டி.குணசிங்க அவர்களுக்கு விசேட இராப்போசன விருந்து படையணித் தலைமையக அதிகாரிகள் உணவகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி மற்றும் பொதுவாக இலங்கை இராணுவத்தினருக்கு ஆற்றிய சேவைகளை நிலைய தளபதி பாராட்டினார்.
ஓய்வுபெறும் பிரிகேடியர் ஓ.எம்.டி குணசிங்க அவர்களுக்கு இராணுவத் வழங்கல் தளபதியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சிஎல்எஸ்சி அவர்கள் அனைத்து அதிகாரிகள் சார்பாக நினைவுச் சின்னம் வழங்கினார்.
பிரிகேடியர் ஓ.எம்.டி.குணசிங்க அவர்களின் சிறப்பான இரவு பிரியவிடை நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.