Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2023 20:13:46 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சைக்கிள் ஓட்டுனர்கள் சைக்கிள் ஓட்டட போட்டியில் சாம்பியன்

இலங்கை இராணுவ மகளிர் படையணியில் 13 படையணிகளை பிரதிநிதித்துவபடுத்தி மொத்தம் 133 சைக்கிள் ஓட்டுநர்கள் பங்குபற்றிய இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியினால் ஒழுங்கமைக்கப்பட்ட படையணிகளுக்கு இடையிலான சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் – 2023 போட்டியில் போட்டியிட்டனர். இப்போட்டி செப்டெம்பர் 7 முதல் 8 வரை உடவலவையில் நடைபெற்றது.

மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இராணுவ சைக்கிள் ஓட்டுதல் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஜேஎஆர்எஸ்கே ஜயசேகர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சாம்பியன்ஷிப் பல்வேறு வகையான போட்டிகளை பெருமைப்படுத்தி பல்வேறு பிரிவுகள் மற்றும் திறன் நிலைகள் மற்றும் வயது எல்லைகளின் கீழ் ஓட்டுநர்களுக்கு பங்குபற்றினர். பந்தய மற்றும் நிலையான ஆண்கள் போட்டிகள், நிலையான பெண்கள் போட்டிகள், 50 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிகழ்வு, மற்றும் தனிப்பட்ட மற்றும் குழு பங்கேற்பிற்கான நிலையான மற்றும்போட்டி துறைகளுக்கான நேர சோதனைகள் ஆகியவை இதில் அடங்கும்.

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் ஓட்டுநர்கள் இறுதியாக 104 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகினர். 50 புள்ளிகளுடன் இலங்கை பீரங்கி போட்டியாளர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்று கொண்டனர்.

2023 இன் படையணி சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் ஆரோக்கியமான போட்டிகளுக்கு ஒரு தளமாக அமைந்தது மற்றும் 13 படையணிகளில் உள்ள தோழர்களுக்குள் பிணைப்பை வலுப்படுத்தியது என்பது குறிப்பிடதக்கதாகும்.