Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th March 2024 17:15:46 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையரினால் சீகிரிய இலுக்வெவ மாணவர்களுக்கு உபகரணங்கள்

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரக்கோன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ரூபா.400,000/- பெறுமதியான பாடசாலை உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி 2024 மார்ச் 08 அன்று சீகிரியா இலுக்வெவ பாடசாலையில் நடைபெற்றது.

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.