16th August 2024 12:27:30 Hours
இலங்கை மற்றும் இந்திய இராணுவத்திற்கும் இடையிலான கூட்டு வருடாந்த ‘மித்ரசக்தி’ பயிற்சியில் தற்போது ஈடுபட்டுள்ள இந்தியப் படையினர், இலங்கையின் மாதுருஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் 78வது இந்திய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படும் இந்தியாவின் சுதந்திர தினம், 1947 இல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் முடிவை நினைவுகூரும் வகையில் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
இந்தியக் குழுவின் தலைவர் கேணல் ரவீந்திர அலவத் அவர்கள் இந்தியக் கொடியை ஏற்றிய பின்னர் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 'மித்ரசக்தி' பயிற்சியின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து இந்த வரலாற்று நாளுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தோழமையின் அடையாளமாக, 'மித்ரசக்தி' பயிற்சியின் பணிப்பாளரினால், இந்தியக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்திற்கு அழைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வின் மூலம் பங்கேற்பாளர்களுக்கிடையே நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகள் மேலும் வலுப்படுத்தப்பட்டன.