11th January 2025 08:53:59 Hours
இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆரடபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 2025 ஜனவரி 07, அன்று பனாகொடையில் உள்ள படையணி மையம் மற்றும் மத்தேகொடையில் உள்ள படையணி தலைமையகத்தில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் ஒழுக்கம், நேர்மை மற்றும் தொழில்முறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ‘தூய இலங்கை’ திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்த திட்டத்தின் நெறிமுறை நடைமுறைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு மூலம் நிலைத்தன்மையை மேம்படுத்த முயல்வதுடன் புதுமை மற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள படையினரை வலியுறுத்தினார்.
சிரேஷ்ட அதிகாரி, படையணியின் முயற்சிகளை, தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான இராணுவத் தளபதியின் இலக்குகளுடன் இணைத்து, தொடர்ச்சியான கற்றலை ஊக்குவித்து, படையணியின் சிறப்பிற்கான நற்பெயரைப் பேணுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். இறுதியில் 2025 ஆம் ஆண்டின் சவால்களை எதிர்கொள்ளும் போது, ஒற்றுமை மற்றும் நோக்கத்தை வளர்ப்பதற்காக, புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.